ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 14வது நினைவுதினம்

க.விஜயரெத்தினம்)
படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 14வது நினைவுதினம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

குறித்த ஊடகவியலாளரின் படுகொலை தொடர்பில் பல்வேறு சாட்சியங்கள் வழங்கப்பட்டபோதிலும் கொலையாளிகள் இனங்காட்டப்பட்டபோதிலும் இதுவரையில் எந்த வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் 14வது நினைவேந்தல் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இன்று 31ஆம் திகதி பிற்பகல் 3.00மணியளவில் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவுதினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

இந்த நினைவு தின நிகழ்வில் ஊடகவியலாளர்கள்,சிவில் சமூக பிரதிநிதிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை கலந்துகொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

நினைவேந்தல் நிகழ்வினையடுத்து யாழில் பிரதேச ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தினை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.

அனைத்து ஊடகவியலாளர்களையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.