நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள்மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தினை கண்டித்தும் தாக்குதலாளி தொடர்பில் முறையான விசாரணையினை வலிறுத்தியும் மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை நீர்பாசன திணைக்கள ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்பாட்டத்தில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு கல்லடி பாலத்தருகில் ஆரம்பமான குறித்த கண்டன ஆர்ப்பாட்ட பேரணியானது, மட்டக்களப்பு காந்திபூங்கா வரையில் சென்றதுடன் அங்கு கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.