மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் நடாத்திய விவசாயிகள்

உன்னிச்சைக் குளத்தின் திறப்பு காரணமாக சுமார் 5000 மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிப்பு சுமார் 500 மேற்பட்ட விவசாயிகள் பாதிப்பு .இதன் காரணமாக இன்று 30/05/2018 பாரிய ஆர்ப்பாட்டத்தினை விவசாயிகளும் விவசாயிகளின் பிரதிநிதிகளும் சுமார் 600 பேர் கலந்துகொண்டார்கள

இதன் போது  அரசாங்கஅதிபரிடம் பிரச்சனைகள் தொடர்பாக விளக்கம் கொடுக்கப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயித்தியமலை வணபிதா  அவர்களும்  கலந்துகொண்டார்

மேலும்  பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் மற்றும்  ச.வியாழேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்

மக்கள் இந்த பாதிப்புக்கு காரணமானவர்கனை உடனடியாக மாற்றம் செய்யும்படியும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டத்தை மேற்கொண்டார்கள்

மேலும் 33′ குளத்தில் 32′ 2″ நீர் நிறைந்த பின்னர் தான் குளம் திறந்து விடப்பட்டது.பதுளை மேல் இடங்களில் மழை பெய்யும் போது இவர்களுக்கு விவசாய குழு திட்ட முகாமை தலைமையினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது குளத்தின் நீர் மட்டத்தை குறைக்குமாறு ஆனால் அவர்கள் குறைக்கவில்லை

குளம் ஆபத்து நிலையை அடைந்த பின்னர் தான் திறந்து விடப்பட்டது அறித்தல் இன்றி திறந்தால் சில வேளை தாழ்வான பகுதியில் வசிக்கும் விவசாயிகளின் உயிர்களும் கவுகொள்ள வாய்ப்பு உண்டு என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

வாவிக்கரை வீதியில் ஆரம்பமான இந்த கவனயீர்ப்பு பேரணியானது அந்தோனியார் ஆலய வீதியூடாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் சென்றதுடன் அங்கு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது. இதன் பின்னர் போராட்டம் நிறைவடைந்தது.