குருக்கள்மடத்தில் மின்கம்பத்துடன் கார் மோதி விபத்து

(க. விஜயரெத்தினம்)
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள் மடத்தில் உள்ள பிரதான வீதியில் உள்ள மின்கம்பத்தில் அதிக வேகத்துடன் கார் ஒன்று இன்று புதன்கிழமை(30.5.2018) காலை 10.00 மணியளவில் மோதியுள்ளது.கல்முனையிலிருந்து மட்டக்களப்புக்கு புறப்படுகையில் அதிகமான வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மின்கம்பத்துடன் மோதிக்கிடப்பதையும்,இதனால் காரில் பயணித்தவர்களுக்கு எதுவித சேதமும் ஏற்படவில்லை