ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் சுய தொழிலை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

சுய தொழிலை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

மனித வலு திணைக்களம் மற்றும் புனர்வாழ்வு அதிகார சபையால் சுய தொழிலை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம் அம்பாறை மாவட்த்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் நடைமுறைப் படுத்தப்பட்டுவருகிறது.

அவ்வாறே ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சுயதொழில் தொடர்பான வழிகாட்டுதல்களும் அவர்களுக்கான மிகக்குறைந்த வட்டிவீதத்தில் சுயதொழிலுக்கான கடன்களை வழங்குவதற்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக கட்டிடத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் ஜெகதீசன், மனிதவலு திணைக்கள அம்பாறை மாவட்ட அதிகாரி என். கங்காதரன் புனர்வாழ்வு அதிகார சபையின் மாவட்ட அதிகாரி ஆசாத் காமில் ஆகியோரும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

இதன் போது சுயதொழில் வளர்ச்சி சந்தைப்படுத்தல் சேமிப்பு வியாபார வளர்ச்சி போன்ற சுயதொழில் வழிகாட்டல் விளக்கங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.