காத்தான்குடி நகரசபை சுழற்சி முறையில் ஆசனம் பகிர்ந்தளிப்பு.

காத்தான்குடி நகர சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கப் பெற்ற தேசிய பட்டியல் ஆசனத்தை போட்டியிட்ட வேட்பாளருக்கு தலா ஒவ்வொரு வருடம் என்ற அடிப்படையில் வழங்கும் வகையில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை இரவு காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எஸ்.மாஹிர் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது எஸ்.மாஹிர் (தாறுஸ்ஸலாம் வட்டாரம்), எம்.ஜௌபர்கான் (மீராபள்ளி வட்டாரம்), முகைதீன் சாலி (அல்-அக்ஸா வட்டாரம்), எஸ்.சப்ரி (நூறாணியா வட்டாரம்) ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுத்தீன் வழிகாட்டலில் கட்சியின் தேசிய தவிசாளரும், கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் மற்றும் அமைச்சரின் ஊடகப் பிரிவினரும் கலந்து கொண்டனர்.