உன்னிச்சை வெள்ள அனர்த்தம் தொடர்பாக ஸ்ரீநேசன்பா.உ தலைமையில் நடைபெற்றகூட்டம்

(மயூ.ஆ.மலை)அண்மையில் உன்னிச்சை குளத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரினால் பல்லாயிரக்கணக்கான நெல் வயல்கள் நீரில் மூழ்கின.இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நீர்பாசண திணைக்கள உத்தியோகத்தர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டு காவல்துறை விசாரணை வரை சென்றுள்ளது.

பாதிக்கப்பட்ட வயல்களை  பார்வையிட்ட  மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் அவர்கள் ,இவ்விடயம் தொடர்பாக ஆராய கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தலைமையில் மாவட்ட அரச அதிபரின் அனுசரனையோடு இன்று மு.ப.10.30 மாவட்டச் செயலகத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்றது.விவசாய அமைப்பு பிரதிநிதிகளும் நீர்பாசண திணைக்கள உத்தியோகத்தர்களுக்கும் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர்.

எனினும் நீர்பாசண திணைக்கள உத்தியோகத்தர்கள், தாம் இவ்விடயம் தொடர்பான தொழிற்சங்க நடவடிக்கையில் உள்ளதால் ,உத்தியோக பூர்வமாக இன்று கூட்டத்தில் கலந்தது கொள்ள முடியாதுள்ளதாகவும் ,ஏனைய பகுதி விவசாயத்திற்கு தேவையான நீரை வாய்க்கால்களில் திறந்து விட உத்தரவிடுவதாகவும் தெரிவித்து வெளியேறினர்.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் வெள்ளத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாகவும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.