கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சிரமம்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சிரமம் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய கோத்தபாய ராஜபக்ச இராணுவ முறைமைக்கு அமைய செயற்பட்டவர் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த தகுதியானவர் அல்ல அவருக்கு பதிலாக சமல் ராஜபக்ச தகுதியானவராக இருப்பார் என எண்ணுவதாகவும் வாசுதேவ குறிப்பிட்டுள்ளார்.
சமல் ராஜபக்ச, ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்தவர் என்பதற்காக தான் இதனை கூறவில்லை எனவும் சமல் ராஜபக்ச நடுநிலையாக செயற்படக் கூடியவர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(JM)