வாழைச்சேனை தவிசாளர் களத்தில்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெரிய கோராவெளி கண்ணகியம்மன் திருக்குளித்தி திச்சடங்கிற்கான ஏற்பாடுகளை வாழைச்சேனை கோறறைப்பற்றுப் பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் பார்வையிட்டர்.

பெரிய கோராவெளி கண்ணகியம்மன் திருக்குளிர்த்தி சடங்கு நிகழ்விற்கு வரும் மக்களுக்கான குடிநீர் வினியோகம், தற்காலிக மலசலகூடம், போக்குவரத்துப் பாதை செப்பனிடல், ஆலய வளாகம் துப்பரவு செய்தல் என்பவை தொடர்பாக பிரதேச சபையூடாக சேவையைப் பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டார்.

இதேவேளை கிரான் பாலம் மற்றும் ஆலயத்துக்கச் செல்லும் போக்குவரத்துப் பாதைகள் அனைத்தும் இடைக்கிடையே உடைப் பெடுத்துள்ள நிலையிலும், வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையிலும் மக்கள் உழவு இயந்திரம் மற்றும் முச்சக்கரவண்டி போன்றவற்றில் பயணிப்பதையும் அவதானிக்க முடிந்தது.

கிரான் பிரதேச செயலகத்தினால் நிருவகிக்கப்படும் இவ்வாலயத்தினால் பெறப்படும் கடைத் தொகுதிகளுக்கான வருமானம் மற்றும் நேர்த்திக் கடனால் கிடைக்கப்பெறும் வருமானம் அனைத்தும் பிரதேச செயலகத்திற்கே செல்வதாகவும் மக்கள் விசனம் தெரிவித்தனர்.

இந் நிலையில் இவ் ஆலயத்துக்கு செல்லும் பாதைகளையாவது அதனால் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு செப்பனிட்டு தருமாறும் பிரதேச செயலக செயலாளருக்கு பரிந்துரைக்குமாறு தவிசாளரிடம் மக்கள் வேண்டுகோள் விடுத்ததாக தவிசாளர் தெரிவித்தார்.