மூதூர் பிரதேசத்தில் நாகம்பாள் ஆலயங்களில் வைகாசி பொங்கல்வேள்வி நிகழ்வுகள்

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு பிரதேசத்தில் சிறந்து விளங்கும் நாகம்பாள் ஆலயங்களில் வைகாசி பொங்கல்வேள்வி நிகழ்வுகள் இன்று சிறப்பாக நடைபெற்றன. சம்பூர் நாகதம்பிரான் ஆலயம்;, கட்டைபறிச்சான் வடக்கு சேனையூர் ஸ்ரீ நாகம்பாள்ஆலயம்,தங்கபுரம் நாகம்பாள்ஆலயம். விரமாநகர் உள்ளிட்ட பிரதேசங்களில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன. இங்கு பல நூற்றுக்கணக்கான அடியார்கள் காவடி,பொங்கல் கற்பூர சட்டி ஏந்தல்போன்ற பல நேர்த்திகளை அதிகளவில் செய்தனர். இவ்வாறான நிகழ்வு பூர்வீக ஸ்ரீ சேனையூர் நாகம்பாள் ஆலயத்தில் இடம்பெற்றவேளை இன்று காலை ஸ்ரீ வர்ணகுல விநாயகர்ஆலயத்தில் இருந்து வளந்து பூசைப்பொருட்கள் ஊர்வலமாக எடுத்து வருவதனையும், பக்தர்கள் காவடி, கற்பூரச்சட்டி நேர்த்திக்கடன்களை உடன் நிறைவேற்றி வருவதனையும் ஆலய முன்றலில் கூடி நிற்கும் அதிகளவிலான பக்தர்களையும் படங்களில்காண்க (பொன்ஆனந்தம்;)