கல்குடா தொகுதி முஸ்லிம் பிரதேசத்தில் இருந்து பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு

கல்குடா தொகுதி முஸ்லிம் பிரதேசத்தில் இருந்து பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வும், “முன்மாதிரி மிக்க அரசியல் கலாசாரத்தை கட்டி எழுப்புவோம்” எனும் தொனிப் பொருளிலாள கருத்தரங்கும் சனிக்கிழமை மாலை மீறாவோடை அந்நூர் கல்வி கலாசாலையில் இடம்பெற்றது.

இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் ஓட்டமாவடி மன்றத்தின் ஏற்பாட்டில் கிழக்கு பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரி.எம்.றிஸ்வி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் தலைவர் உஸ்தாத் ரஷீட் ஹஜ்ஜூல் அக்பர் மற்றும் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் பிரதி தலைவர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.ஹ_ஸைர் (இஸ்லாஹி) ஆகியோர் கலந்து கொண்டு “முன்மாதிரிமிக்க அரசியல் கலாசாரத்தை கட்டி எழுப்புவோம்” எனும் தொனிப் பொருளில் கருத்துரைகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, பிரதி தவிசாளார் உதுமாலெவ்வை அகமதுலெவ்வை மற்றும் சபையின் அனைத்து உறுப்பினர்களும், வாழைச்சேனை மற்றும் வாகரை பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது இப்தார் நிகழ்வும் இடம்பெற்றதுடன், பிரதேச சபை உறுப்பினர்களின் கருத்துரைகளும் இடம்பெற்றது.