வெள்ளத்தால் மூழ்கியுள்ள நெல் வயல்கள் தொடர்பாக ஆராய விசேட கூட்டம்-5000ஏக்கர் நீரில்

-ஸ்ரீநேசன் பாராளுமன்ற உறுப்பினர் நடவடிக்கை

கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளிலும் பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல குளங்களுக்கும் நீர் வருகை அதிகமாகி குளங்களின்  நீர் மட்டம் உயர்ந்துள்ளது.உன்னிச்சை குளத்தின் நீர்மட்டத்தினை பேணுவதற்காக திடீரென திறந்து விடப்பட்ட நீரினால் , உன்னிச்சை குளத்தின் பாய்ச்சலினால் சிறுபோகத்தில் செய்கைபண்ணப்பட்ட சுமார் 5000 ஏக்கருக்கும் அதிகமான  நெல் வயல்கள் நீரினால் மூடப்பட்டு அழிவடையும் நிலையில் உள்ளன.மேலும் விவசாயிகளின் வாடிகளும் சொத்துக்களும் நீரில் மூழ்கியுள்ளன.

மேலும் வெள்ளநீரினால் கிரான்புல் அணைக்கட்டு உடைப்பெடுத்தமையினால் சித்தாண்டி பிரதேசத்திலுள்ள சின்னவன்வெளி,சின்னாளண்வெளி கண்டங்களிலுள்ள சுமார் 750 ஏக்கர் நெல் வயல்களும் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளன.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வயல்வெளிகளை நேரில் சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் அவர்கள், அடுத்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விவசாயிகளோடு கலந்துரையாடினார்.மாவட்ட அரச அதிபர் ,பிரதேச செயலாளர் மற்றும் உரிய அதிகாரிகளோடும் தொடர்புகொண்டு நிலைமை தொடர்பாக ஆராய விசேட கூட்டம் ஒன்றை கூட்ட ஏற்பாடு செய்தார்.