படுவான்கரைக்கான போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம்?

மட்டக்களப்பு உன்னிச்சைக்குளத்தின் வான் கதவு 5அடிக்கு திறந்து விடப்பட்டுள்ளதால் படுவான்கரையின் பலபிரதேசங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

சிறுபோகம் வயல்கள் விதைத்து 35 நாட்கள் சென்ற நிலையில் கரவெட்டிக்கண்டம் கிளாக்கொடிச்சேனை வாழைச்சேனைக்கண்டம் ஆகியபகுதிகளிள் உள்ள நெல்வயல்கள் நீரில் மூழ்கியுள்ளது.3நாட்கள் தொடர்ச்சியாக பயிர்கள் நீரில் மூழ்கினால் பயிர்கள் அழுகிவிடக்கூடிய ஆபத்து தென்படுவதாக பிரதேச விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதுமாத்திரமின்றி வீதிகளிலும் நீர்பெருக்கெடுத்துள்ளதால் கரவெட்டி மகிழவெட்டுவான் நரிப்புல்தோட்டம் உட்பட பலகிராம மக்கள் போக்குவரத்திலும் பாரியசிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அத்துடன் இ.போ.சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகளும் இன்று காலைமுதல் போக்குவரத்தில் ஈடுபடவில்லையென பிரதேசமக்கள் தெரிவிக்கிள்றனர்.

இது சம்பந்தமாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் கவனம் செலுத்த வேண்டுமெனவும் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

படங்கள்

வி.ஜங்கரன்