8 பரீட்சைகள் பிற்போடப்பட்டன

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலைக் காரணமாக, பரீட்சைகள் திணைக்களத்தால் நடத்தப்படவிருந்த 8 பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, இந்த மாதம் 24,25,26,27 மற்றும் ஜுன் மாதம் 2ஆம் திகதி நடத்தப்படவிருந்த 8 பரீட்சைகளே இவ்வாறு பிற்போடப்படுவதாக பரீட்சைகள் திணைக்கள பதில் ஆணையாளர் ஜெனரல் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.