சட்டவிரோத செயல்களை தடுக்க கொக்கட்டிச்சோலையில் பொலிஸ்

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்கட்டிச்சோலையில், கிராமத்திற்கு பொலிஸ், நடமாடும் சேவை நிலையம் நேற்று(22) செவ்வாய்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சிசிற பண்டார தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஆர்.குமாரசிறி கலந்துகொண்டு நிலையத்தினை திறந்து வைத்தார்.
பொதுமக்களுக்கு இலகுசேவையினை வழங்கும்பொருட்டும், சட்டவிரோத செயல்களை தடுக்கும் பொருட்டும் ஒரு மாதகாலத்திற்கு இச்சேவை நிலையம் இயங்கவுள்ளதாக உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் இதன்போது தெரிவித்தார்.

நிகழ்வில் கிராமசேவை உத்தியோகத்தர்கள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.