சமூர்த்தி திணைக்களத்தில் உத்தியோகம் பெற்றுத்தருவதாக கூறி 3லட்சம் ரூபாய் நபர் நீதிமன்றில்

இளைஞர்கள் பலரிடமும்வேலை பெற்றுத்தருவதாக கூறி நிதிமோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரொருவரை சம்பூர் பொலிசார் இன்று மூதூர் நீதிமன்றில் ஆஜார் செய்திருந்தனர்.
சம்பூரைச்சார்ந்த ரஜரூபன் என்ற இளைஞர் தமக்கு குறித்த ( 59ம்கட்டை,ஜின்னாநகர்,தோப்புரைச்சார்ந்த ஜெயினூதீன்) நபர் சமூர்த்தி திணைக்களத்தில் உத்தியோகம் பெற்றுத்தருவதாக கூறி 3லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றியதாக செய்யப்பட்டமுறைப்பாட்டின் அடிப்படையில் ;தேடப்பட்டு வந்த நபர் நேற்று மாலை மூதூர் நகரில்வைத்து பொலிசாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்
இந்நிலையில் இன்றைய தினம் மாலை குறித்த சந்தேக நபரை சம்பூர்பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜார்செய்தபோது குறித்தபிரதேச நீதிமன்ற நடவடிக்கைள் வியாழன் எடுத்துக்கொள்ள இருப்பதனால் அதுவரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர் இவ்வாறு பல இளைஞர்களிடமும் அதிக பணத்தை பெற்று பிரதான கட்சி ஒன்றின் இணைப்பாளர் எனக்கூறி ஏமாற்றியுள்ளதாகவும் பல பொலிஸ்நிலயங்களிலும் பல முறைப்பாடுகள் இவருக்கெதிராக உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.இவ்வாறு பாதிக்கப்பட்ட இளைஞர்கள் திருகோணமலை நகர் பிரதான பொலிஸ் நிலயத்திலும் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட் இளைஞர்கள் தெரிவித்தனர’