வேலை எடுத்துதருவதாக கூறி பணம் பெற்றது தொடர்பில் விசாரணை

திருகோணமலை மாவட்டத்தின் மீழ்குடியேற்றக்கிராமமான சம்பூர்கிராமத்தில் மீழக்குடியமர்த்தபட்ட மக்கள் சிலரிடம் வேலை எடுத்துதருவதாக கூறி பணம்பெற்றதாக செய்யப்பட்ட முறைப்பாட்டின் விசாரணையை துரிதப்படுத்தமாறு உயர்பொலிஸ் அதிகாரியிடமும் கோரிக்கைவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சம்பூர் பொலிசில் முறைப்பாடொன்றை ரஜரூபன் என்பவர் தோப்பூர் ஜின்னாநகர் பகுதியைச்சார்ந்த அமிர் என்பவருக்கெதிராக கடந்த 9.5.2018 அன்று முறைப்பாடொன்றை செய்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்படாமல் இருப்பதாக பொலிஸ் உயரதிகாரிகளின் கவனத்திற்கு பாதிக்கப்பட்டவர்கள் கொண்டுவந்துள்ளனர்.

குறித்த நபரிடமிருந்து வேலை பெற்றுத்தருவதாக ஆளும் தரப்பில் உள்ள பிரதான கட்சியொன்றின் செயற்பாட்டாளர் தான் எனக்கூறி 3லட்சம் ரூபாயும் வீடு ஒன்றை துரிதமாக பெற்றுத்தருவதாக 2லட்சம் ரூபாயும் லஞ்சமாக பெற்றதாக சம்பூர் பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டில் பாதிக்கப்பட்டவர் முறையிட்டுள்ளார்.

அத்துடன் காசு பரிமாற்றம்செய்த வங்கி ஆவணங்களும் பொலிசாரிடம் முறையிட்டபோது சமர்ப்பிக்கப்பட்டதாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகளைதுரிதப்படுத்தி தமக்கு நிவாரணம்வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உயரதிகாரிகளைச்சந்தித்;து கொரிக்கை விடுத்தள்ளனர். இதே நபர் இவ்வாறு பலரிடம் பண்ம்பெற்றதான மேலும் முறைப்பாடுகள் உள்ளதாக பாதிக்கப்பட்ட சிலர் தெரிவிக்கின்றனர்.