கிழக்கு மாகாணத்திற்கு 8000 மில்லியன் ரூபா நிதி.கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்

க. விஜயரெத்தினம்)
யுத்தத்தினால் நலிவடைந்த வடகிழக்கு மாகாணத்தில் கல்வியை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதியும்,பிரதமரும் தூரநோக்கு சிந்தனையுடன் இருக்கின்றார்கள்.கிழக்கு மாகாணத்திற்கு 8000 மில்லியன் ரூபா நிதி கடந்த மூன்றுவருடங்களுக்குள் நல்லாட்சி அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.2000 கல்வி வலயங்களை உருவாக்குவதற்கும் 300 ஸ்மாட் வகுப்பறைகளை அமைப்பதற்கும்,பத்தாயிரம் பாடசாலைகளுக்கு 90 வீதம் மின்சாரத்தை தங்குதடையின்றி பூர்த்தி செய்து கொடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்ச்சி கலாசாலைக்கான மூன்றுமாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டியும்,கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்திற்கான ஆரம்பக்கல்வி வளநிலையத்தையும் சனிக்கிழமை (19.5.2018)  திறந்து வைத்தும் பேசுகையிலே இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்:-கடந்த மூன்றரை வருடங்களுக்குள் எமது நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்று மக்கள்,மாணவர்கள் பயனுள்ள நல்ல வேலைத்திட்டத்தை நாங்கள் செய்துள்ளோம்.கடந்த 2015 தைமாதம் நாட்டில் உள்ள மக்கள் வாக்களித்து நல்லாட்சியை உருவாக்கியுள்ளீர்கள்.நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளிகளாக கிழக்கு மாகாண தமிழ்மக்களும்,முஸ்லிம் மக்களும் இருக்கின்றார்கள் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.வடகிழக்கில் கடந்த யுத்தத்தினால் பாரிய அழிவுகளையும்,சேதங்களையும் ஏற்படுத்தி மக்களின் மனதில் மனக்காயங்களுடன் வாழ்வதை அவதானித்துள்ளோம்.இவ்விரு மாகாணத்தின் கல்வியை கட்டியெழுப்புவதில் எமது நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்,பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தூரநோக்கு சிந்தனையுடன் உள்ளார்கள்.யுத்தத்தினால் வடகிழக்கில் மக்களினதும்,மாணவர்களினதும் கல்விவளச்சி வீழ்ச்சி கண்டுள்ளது.கல்வித்துறையை முன்னேற்றும் எண்ணம் நல்லாட்சி அரசாங்கத்திற்குண்டு.அண்மையுள்ள பாடசாலை,சிறந்தபாடசாலை எனும் தேசிய வேலைத்திட்டத்தில் வடகிழக்கு உட்பட நாடுபூராகவும் கல்வியை கட்டியெழுப்பி வருகின்றோம்.2015 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண கல்வி அபிவிருத்திக்கு 8000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னர் வடகிழக்கு உட்பட ஏனைய மாகாணங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணம் 8000 மில்லியன் ஆகும்.ஆனால் அதனை மாற்றி தனியே கிழக்கு மாகாணத்திற்கு நல்லாட்சி அரசாங்கம் 8000 மில்லியன் ஒதுக்கியுள்ளோம்.ஆனால் எட்டாயிரம் மில்லியனைவிட கல்விக்குரிய செலவுத்தொகை அதிகரித்துள்ளது.திருகோணமலைக்கு 2400 மில்லியனும்,மட்டக்களப்புக்கு 2800 மில்லியனும்,அம்பாறைக்கு 2800 மில்லியனுமாக மொத்தம் 8000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.இலங்கையில் மிகப்பெரிய விசாலமான கல்வி வேலைத்திட்டத்தை சர்வதேச,தேசிய கல்விக்கொள்கையின் மூலம் செயற்படுத்தி வருகின்றோம்.இவை கிழக்கு மாகாண மாணவர்களின் கல்வியை ஊக்குவிப்பதற்காகவே இவ்வேலைத்திட்டத்தை முன்னேடுத்தோம்.
உண்மையில் மூன்று தசாப்த காலமாக பாரிய அழிவுகளையும்,சேதங்களையும் ஏற்படுத்தி கல்வியை சீரழித்துள்ளது.இதனால் கல்விவளர்ச்சி பின்னுக்கு சென்றுள்ளது.கல்வியின் ஊடாக இம்மாகாணத்தை கட்டியெழுப்ப வேண்டிய தேவை அரசாங்கத்திற்குண்டு.
நாங்கள் பொறுப்பேற்று மூன்றரை வருடங்களுக்குள் 4000 அதிபர்களை நியமித்துள்ளோம்.852 கல்வி நிருவாகசேவை அதிகாரிகளையும்,1296 இலங்கை ஆசிரியர் கல்வியலாளர்களையும் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.கிழக்குமாகாணத்தில் ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு படித்தவர்களுக்கு போதியளவு திறன்கள் போதாததால் ஆசிரிய உதவியாளர்களாக சேர்த்துக்கொள்வதற்கு கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆட்சியாளர்களினால் பாடசாலைக்கு செய்யப்படமால் காணப்பட்ட 3000 பாடசாலைக்கு நடமாடும் விஞ்ஞான ஆய்வுகூடங்களை உருவாக்கியுள்ளோம்.கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 700 மில்லியன் ரூபாநிதியில் பாடசாலை நூலகங்களுக்கு புத்தங்கள் நூல்கள் வாங்கிக் கொடுத்துள்ளோம்.8000 மில்லியனையும் தாண்டி பாடசாலைக்கு செலவு செய்துள்ளோம்.எனவே கிழக்கு மாகாணத்தின் கல்வியை முன்னேற்றுவதில் நாங்கள் கரிசனை செலுத்தியுள்ளோம்.இதற்கு பாடசாலை அதிபர்ரள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் ஒற்றுமையாக செயற்பட்டு அரசாங்கத்துடன் கைகோர்த்து நவீன கல்வித்திட்டமிடலுடன் கூடிய கல்வியை வளர்ச்சியடைச் செய்வோம்.கல்வியறிவினால் நாம் வளர்ச்சியடைய முடியும்.கல்வியினால் நல்ல பிரஜையை உருவாக்கமுடியும்.கல்வியினால் பணக்காரன் ஆகமுடியும்.

தற்போது நல்லாட்சி அரசாங்கத்தினால் 13வருட கட்டாயக்கல்வியை மாணவர்களின் நன்மைகருதி  உருவாக்கியுள்ளோம்.விஞ்ஞானம்,கலை,விவசாயம்,மின்சாரம் உட்பட 26 பாடங்களை உள்ளடக்கி கட்டாயக்கல்வியை உருவாக்கியுள்ளோம்.கணிதம் விஞ்ஞானம் சித்தியடையாத மாணவர்களும் இணைந்து கட்டாயக்கல்வியை படித்து திறன்களை முன்னேறலாம்.இவ்வேலைத்திட்டமும் நாட்டுக்கு பிரயோசனமாகவுள்ளது.இவை சர்வதேச,தேசிய கல்விக்கொள்கையுடன் கூடிய செயற்பாடாகும்.கல்வித்துறையில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டாலும் இன்னும் 15வருடங்கள் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிசெய்தால் நாடு கல்வியில் பாரிய வளர்ச்சியை அடையும்.

இலங்கையில் 98 கல்விவலயங்கள் காணப்படுகின்றது.இதனை 2000 கல்வி வலயங்களாக உருவாக்கவுள்ளோம்.இதனால் நிருவாகவேலை குறைவடைந்து பாடசாலைகளின் எண்ணிக்கையும் குறைவடையும்.நிருவாகம் இலகுபடுத்துவதால் கல்வியின் வளர்ச்சிப்போக்கு,திட்டமிடல்கள் அதிகரிக்கும்.கிழக்கு மாகாணத்தில் உள்ள 1400 பாடசாலைக்கு மிகவிரைவில் கணினிகளை வழங்கவுள்ளோம்.கிழக்கில்300 பாடசாலைகளில் ஸ்மாட் வகுப்பறைகளை உருவாக்கவுள்ளோம்.க.பொ.த.உயர்தர மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கவுள்ளோம்.கட்டாயக்கல்விக்காக 42 பாடசாலைகளுடன் ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடம் 150 பாடசாலைகளில் கட்டாயக்கல்வி நடைபெற்று வருகின்றது.அடுத்த வருடம் நாடுபூராகவும் உள்ள பாடசாலைகளில் கட்டாயக்கல்வி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.பாடசாலைகளின் கல்விநடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கு சுயாதீனகல்வி ஆணைக்குழுவை அங்குரார்ப்பணம் செய்யவுள்ளொம்.வட்டாரக்கல்வி அதிகாரிகளை உருவாக்கவுள்ளோம்.இவர்கள் அரச,தனியார்,சர்வதேச பாடசாலைகளை மேற்பார்வை செய்து கல்விவளர்ச்சியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் கடந்த ஆட்சியாளர்கள் பாடசாலைக்கு மின்சாரம் வழங்க மறுத்தார்கள்.நாங்கள் தற்போது 10000 பாடசாலைகளில் 90வீதம் மின்சார வேலைகளை செய்து கொடுத்து கல்வியில் கவனம் செலுத்தி வருகின்றோம்.26000 பாடசாலைகளில் சுத்தமான குடிநீர் வசதிகளை மாணவர்களின் நன்மைகருதி செய்துகொடுத்துள்ளோம்.கடந்த மூன்றரை வருடங்களுக்குள் 6000 கட்டிடங்களை பாடசாலைக்கு அமைத்து கொடுத்துள்ளோம்.தேசிய கல்வி நிறுவகத்தின் ஆலோசனையின்படி பாடசாலையின் கற்றல்,கற்பித்தல்களை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றோம்.இவ் ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்குரிய விஞ்ஞான ஆய்வுகூடங்கள்,கணனி நிலையம்,சிறுவர்பூங்கா,மின்சாரக்கட்டமைப்புக்களை செய்து கொடுப்பேன் என உறுதிமொழி வழங்கித்தெரிவித்தார்.