வைத்தியசாலையே வாழ்விடமாய் போன சோகம்!

 

    –படுவான் பாலகன் –

நாமேநமது தலையில் மண்ணை அள்ளிப் போடுற நிலையாப்போச்சு! வைத்தியசாலைவைத்தியசாலை என்று ஏறிஇறங்கிற நிலையுமாய் ஆகிட்டு. இப்படி போன முப்பத தாண்டுவதே கஸ்டமாகத்தான் இருக்கும்போல. என தும்பங்கேணி சந்தியில் காலைவேளையில் சாமித்தம்பியும் குஞ்சித்தம்பியும் சைக்கிளில் நின்று பேசிக்கொண்டு நின்றனர்.

சாமித்தம்பி வேளாண்மை செய்வதில் கெட்டுக்காரர். வேளாண்மை செய்யவென்று ஆரம்பித்தால் வயலிலே எந்தநேரமும் கிடப்பார். களைபிடுங்குவதுதண்ணீர் பாய்ச்சுவது,  வக்கடை கட்டுவது,பசளை இடுவதுஎண்ணெய் விசுறுவது என ஏதாவது வேலையை செய்து கொண்டிருப்பார். காலையில் எழும்பினால் வயலுக்குள்தான் நிற்பார். மாட்டைக் கொண்டு உழவுசெய்தும்,சூடுமிதித்தும்கம்பெடுத்து உப்பட்டி அடித்தும்பட்டறை கட்டி நெல்லைப் பாதுகாத்த அனுபவத்தினையும் கொண்ட வயதான ஒருவர்தான் சாமித்தம்பி. வேளாண்மை செய்வதில் பட்டறிவு கொண்டவர். குஞ்சிதம்பியோஉழவு இயந்திரத்தினால் உழவு செய்து வேளாண்மை செய்ய ஆரம்பித்த காலத்தின் பின்தான் சுயமாக வேளாண்மை செய்ய ஆரம்பித்தவர். சாமித்தம்பி மூன்று தலைமுறையை கண்டவராக இருந்ததினால் தனது அனுபவத்தினை யாரிடமாவது கொட்டித் தீர்க்க வேண்டுமென்ற எண்ணமிருந்தது. ஆனால் ஆறுதலாக இதுபற்றி பேசுவதற்கு நேரம் கொடுக்க யாரும் எண்ணுவதில்லை. அவ்வாறு யாரும் சாமித்தம்பியிடம் பேச வந்தாலும் நீண்ட நேரமாகவிருந்து பேசுவதில்லை. தமக்கு வேறு வேலைகள் இருக்கின்றன என்று கூறி தப்பித்துச் செல்வதுபோன்று சென்றுவிடுவர். இதனால் சாமித்தம்பி போன்ற பெரிய நூலகங்கள் எல்லாமே அடைக்கப்பட்டதாகிவிட்டன. சாமித்தம்பியைப் பற்றி பிறகு பேசுவோம். தும்பங்கேணி சந்தியில் நின்று காலைவேளையில் இருவரும் நீண்ட நேரமாக என்ன பேசினார்கள் என்பதனை பார்ப்போம்.

30 வருடத்திற்கு முன்பு செய்த வேளாண்மைச் செய்கைக்கும்,தற்போதைய வேளாண்மை செய்கைக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மூன்று தசாப்தத்திற்கு முன்பு,நிறைவாக மனிதவலுக்களே அதிகம் தேவைப்பட்டன. அவை இன்று இல்லாமல் சென்று இயந்திரத்தின் பயன்பாடு அதிகரித்திருக்கின்றது. இதனால் வேலையில்லாப்பிரச்சினை உருவாகி படுவான்கரைமக்கள் பெரும்பான்மையாக மத்திய கிழக்கு நாடுகளிலே தொழில்புரிந்து கொண்டிருக்கின்றனர். நீண்ட காலத்து நெல் விதைகள் இல்லாமல் சென்று குறுகிய கால நெல்லினங்களே உற்பத்தி செய்யப்படுகின்றன. விரைவாக நெல் உற்பத்தியை பெற்றுவிட வேண்டுமென்ற எண்ணம் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது. அதேவேளை வேளாண்மை செய்கை ஆரம்பித்தது முதல் அறுவடை செய்து வீடுகொண்டு வரும் வரை பல பாடல்களையும் பாடி மகிழ்கின்றகதைகளை பேசி சந்தோசமடைகின்ற தருணங்கள் இல்லாமல் சென்றிருக்கின்றது. இவ்வாறு விவசாய செய்கையில் இருந்து நழுவிய பல செயற்பாடுகளை குறிப்பிட முடியும்.

அதைவிடுத்துசாமித்தம்பியும்,குஞ்சித்தம்பியும் ஏன் நமது தலையில் நாமே மண்ணை அள்ளி போட்டுவிட்டோம் என்று கூறினர் என்பதை பார்ப்போம்; படுவான்கரையில் சிறுபோக விவசாய செய்கைக்காக நெல் விதைக்கப்பட்டு பயிர்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. நெற்பயிர்களுடன் களைகளும் வளர்கின்றமையும் வழமை. இப்போதும் நெற்பயிர்களுடன் களைகள் வளர ஆரம்பித்துள்ளன. இதனை கட்டுப்படுத்துவதற்காக களைநாசினிகளை விசிறுவதற்கு விவசாயிகள் ஆரம்பித்துள்ளனர். ஏதோஏதோ பெயர்களைக் கூறி விசுறுகின்றனர். இத்தோடு நிறுத்தினால் பறவாயில்லை. நோய் ஏற்பட்டால் வேளாண்மை குடலையாக இருக்கின்ற போது,நெல்மணி நிரம்புகின்ற நேரங்களில் எல்லாம் ஏதும் நோய்கள் ஏற்பட்டுவிட்டால் கிருமிநாசினிகள் விசுறுகின்றனர். அத்தோடு நிறுத்திவிடுவதில்லை. பக்கத்தில் உள்ள வயலில் நெல் விளைந்து விட்டால்தனது வயலில் விளையவில்லையாயின் உடனடியாக நெல்லினைப் பழுக்க வைப்பதற்காகவும் ஏதோ ஒருவகை எண்ணெயை விசுறுகின்றனர். மூன்று மாதத்திற்குள் வேளாண்மை விளைகின்றது. இதற்கு இடையில் குறைந்தது மூன்று தடவைகளாவது நாசினிகளை விசுறுகின்றனர். பின்னர் அந்த நெற்களையே அரிசியாக்கி உணவு உண்கின்றனர். இதனால் நாமே நஞ்சை ஊற்றி நாமே அருந்திக் கொண்டிருக்கின்றோம். என்பதைதான் நமது தலையிலே நாமே மண்ணை அள்ளி போடுகின்றோம் என்று சாமித்தம்பி கூறினார்.

சாமித்தம்பி நாசினிகள் விசுறுவதை மட்டும் கூறிகுற்றம்சுமத்திவிட்டு நிறுத்தவில்லை. தமது காலத்தில் நோய்களை விரட்ட களைகளை கட்டுப்படுத்த என்ன செய்தார்கள் என்ற விடயத்தினையும் கூறினார். படுவான்கரைப் பகுதியில் வேளாண்மைச் செய்பவர்களிடம்,எப்போதும் இறைநம்பிக்கை மேலோக்கியிருக்கும். வேளாண்மை செய்ய ஆரம்பித்தது தொடக்கம்,அறுவடை செய்யும் வரைக்கும் இறைவழிபாடுகளிலே ஈடுபட்டிருப்பர். வேளாண்மை செய்கையில் மேற்கொள்ளும் ஒவ்வொரு விடயங்களின் போதும் இறைவழிபாட்டை மேற்கொண்டதன் பின்பு தமது காரியங்களை மேற்கொள்வர். களைகளை அகற்ற களைகளை பிடுங்குவர். நோய்களை கட்டுப்படுத்த கோயிலில் வழங்கப்படும் தீர்த்தத்தினை கொண்டு விசுறுவர். சாம்பலைக்கொண்டு விசுறுவர்,வேப்பைச் சாறுகளை விசுறுவர். இவ்வாறு இயற்கையை கொண்டும்,நமது நம்பிக்கையின் அடிப்படையிலும் விசுறுவர். நோய்கள் அனைத்தும் நீங்கிவிடும். அறுவடையின் போது சிறந்த விளைச்சல் கிடைக்கும். அரிசியிலும் நச்சுத்தன்மையில்லை. இதனால் உடலாரோக்கியம் பெறும். ஆனால் தற்போதுநமக்கு தெரிந்தேநாமே ஒவ்வொரு நாளும் நஞ்சை குடித்துக்கொண்டிருக்கின்றோம். இதனால் நோய்களுக்கு ஆளாகின்றோம். அன்றைய காலத்;து மனிதர்களின் வாழும் வயதெல்லை75க்கு மேல் இருந்தது. தற்போதைய காலத்தில் 30வயதை கடப்பது என்பதும் பாரிய பிரச்சினையேயாகும். என்றார் சாமித்தம்பி. இருவரும் கதைத்துக்கொண்டிருக்கும் நேரம் வெப்பமும் அதிகரிக்கத் தொடங்கியது இருவரும் அவ்விடத்தினை விட்டு சென்றனர். நாம் மாறாதவரை நமது வாழ்நாள் குறைவில் மாற்றமில்லை. மாறினால் மாற்றத்தினை ஏற்படுத்த முடியும். வாழ்ந்து காட்டிய சமூகம் இருக்கும் போதுஅதிகம் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. அன்றைய செய்கைமேற்கொள்ள ஒன்று சேர்வோம்.

 

arangam