வாகரையில் தமிழ் தேசிய மக்கள் முன்னியினால் நினைவு கூறப்பட்டது

தமிழ் தேசிய மக்கள் முன்னியினால் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மாணிக்கபுரம் வாவிக்கரை ஓரத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலை செய்யப்பட்டு ஒன்பது வருட நினைவு கூரும் வகையில் அஞ்சலி நிகழ்வு வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ரீ.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கு.குணசேகரம், தமிழ் தேசிய மக்கள் முன்னியின் மாவட்ட அமைப்பாளர்கள், மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது உயிர் நீர்த்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்தனை இடம்பெற்று வாவிக்கரை ஓரத்தில் தீபம் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போது இறுதி நேரத்தில் சாப்பிடுவதற்கு உணவு இல்லாமல் இருந்ததை நினைவு கூர்ந்து உப்பில்லாத கஞ்சியும் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.