கிழக்குப் பல்கலையில் எழுச்சியுடன் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் படுகொலை தின நினைவேந்தல் நிகழ்வு இன்று (18) கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மிக எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது.

இந்நினைவேந்தலில் கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட பீடாதிபதி மற்றும் கல்வி சார், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள், அனைத்துப் பீடங்களின் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பீடாதிபதி, சிரேஸ்ட விரிவுரையாளர், மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ஆகியோரினால் அஞ்சலியுரை நிகழ்த்தப்பட்டு இறுதியில் அனைத்து மாணவர்களும் மெழுகுவர்த்தி ஏற்றி உயிரிழந்த உறவுகளுக்கு தங்களில் அஞ்சலியினைச் செலுத்தினர்.