நியமனங்கள் வழங்கும்போது யாருக்கும் அநிதீ இழைக்கப்படும்விதத்தில் நியமனங்கள் வழங்குவதற்கு இடமளிக்கப்படாது.

பொன்ஆனந்தம்
நியமனங்கள் வழங்கும்போது யாருக்கும் அநிதீ இழைக்கப்படும்விதத்தில் நியமனங்கள் வழங்குவதற்கு இடமளிக்கப்படாது.
என கிழக்கு மாகாண ஆளுநர் ரோகிதபோகல்லாகம தெரிவித்துள்ளார்.
நியமனத்திற்காக வெளியிடப்பட்டுள்ள தொண்டராசிரியர் பட்டியலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பரவலாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வரும் நிலயில், ஆளுநர்மேற்படி விடயத்தை தெரிவித்துள்ளார்.

இவ்விடயத்தில் அநிதீ ஏற்படுத்தப்பட்டிருந்தாலும்.முறைகேடுகள் இடம்பெற்றிருக்கிறது என்று யாராவது கருதினாலும் செயலகத்துடன் தொடர்புகொள்ளுமாறும் அளுநர் இதன்போது மேலும் கருத்துவெளியிடுகையில் குறிப்பிட்டதாக அவரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நியமனத்திற்கான பெயர்பட்டியல் வெளியான பின்பு பாதிக்கப்பட்டதாக கருதப்படும் தொண்டராசிரியிர்கள் பல இடங்களிலும் பொராட்டங்களை நடாத்தியதுடன் நியமனத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட பட்டியிலில் தவறானவர்களின் பெயர்கள் புகுத்தப்பட்டிருப்பதாகவும் போராட்டத்தின்போது சுட்டிக்காட்டியிருந்தனர். இந்நிலையிலேயே ஆளநரின் மேற்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளன.