தமிழ் தேசியத்தையும்,தலைவர் பிரபாகரனையும் வைத்து பிழைப்பு நடத்த அவசியமில்லாதவன்…………….

தமிழ் தேசிய அரசியலுக்குள் உள்நுளைதல்,

தமிழ் தேசியம் பேசும் தமிழ் சமூகத்திற்குள் ஊடுருவது அல்லது உள்நுழைவதென்பது ஒன்றும் மிகவும் கஸ்ட்டமான காரியமாமோ அல்லது முடியாத விடயமோ இல்லை,அது மிகவும் சுலபமான விடயமாகும்,

உள்நுளைய அல்லது ஊடுருவ விரும்புபவர் தலைவர் பிரபாகரனையும்,தமிழ் தேசிய அரசியலையும் இரண்டுவரிகள் நியாயப்படுத்தியோ அல்லது புகழ்ந்தோ பேசிவிட்டால் அவர் தமிழ் தேசிய சமூகத்தின் மிகவும் அன்புக்குரியவராகவும் மதிப்புக்குரியவராகவும் மறுகணமே மாறிவிடுவார்,புகழ்ந்து பேசியவர் இந்தியா தமிழ் நாட்டில் வசிப்பவராக இருந்தால் அதாவது தலைவரையும் தமிழ் தேசியத்தையும் புகழ்ந்து பேசிய அந்த நபர் தமிழ் நாட்டில் வசிப்பவராக இருந்தால் இவ்வாறு பேசிய சிலமாதங்களின் பின்னர் ஏதாவொரு புலம்பெயர் நாடொன்றுக்கு சிறப்பு விருந்தினராகவோ அல்லது சிறப்பு பேச்சாளராகவோ அழைக்கப்படுவார் இது ஒரு எழுதப்படாத நியதியாகவும் விதியாகவும் இருக்கிறது,இதுவே தமிழ் தேசிய அரசியலின் கடந்தகாலமாகவும் இருக்கிறது,

அதேபோல் இலங்கை வடகிழக்கு தமிழ் அரசியல் பரப்பிலும் இதுவே நியதியாகவும் விதியாகவும் இருக்கிறது,

எனவே தமிழ் தேசிய அரசியல் பேசும் தமிழ் சமூகத்திற்குள் உள்நுளைதல் அல்லது ஊடுருவல் செய்ய வைத்து தமக்கு வேண்டியவரை தமிழ் தேசிய அரசியலுக்கு தலைமை தாங்க வைப்பதென்பது ஒன்றும் அவ்வளவு பெரிய கஸ்ட்டமான ஒரு விடயமில்லை,
காரணம் தமிழ் தேசிய அரசியல் அறிவார்ந்து சிந்திக்காது உணர்ச்சிகரமாக சிந்தித்து அறிவை புறம்தள்ளி இராஜதந்திரமற்று மனதுக்கு முக்கியத்துவம் கொடுத்து கடந்தகாலத்தில் பயணித்தது தற்போதும் பயணித்துக் கொண்டிருக்கிறது,

தற்போது பயணிப்பதன் விளைவுதான் விக்கினேஸ்வரனின் தமிழ் தேசிய முகமூடியும்,தனிக்கட்சி அரசியலும்,இதன் மறு விளைவுதான் சுமந்திரனை தமிழ் சமூகம் வெறுப்பதும் ஒதுக்குவதும்,

தமிழ் தேசியத்தையும்,தலைவர் பிரபாகரனையும் வைத்து பிழைப்பு நடத்த அவசியமில்லாதவன் விரும்பாதவன் நேர்மையாகவும் உண்மையாகவும் பேசுவான் தமிழ் சமூகத்திற்கு தமது உரிமையை பெற்றுக்கொள்வதற்கான போராட்டத்தின் இலக்கை அடைதலுக்குரிய வழிகள் அல்லது பயணிக்கும் பாதைகள் சம்பந்தப்பட்ட விடயத்தில் அது எப்போதும் பொய்மைகளிலும் நடிப்புக்களிலுமே நம்பிக்கை வைத்துள்ளது இதுவே தமிழ் சமூகத்தின் மிகப்பெரிய பலயீனமாகவும் விடுதலையை வெல்வதற்கான மிகப்பெரிய தடையாகவும் இருக்கிறது,

அறிவுபூர்வமாக தமிழ் தேசியத்தை வெல்வதும் பொய்மைகளை புரிந்திகொள்ளலும் தமிழ் தேசிய அரசியலுக்கு தேவையாகவுள்ளது,

தமிழ் தேசிய அரசியலும் நாமும் மாறவேண்டும் இல்லையேல் நாம் அழிக்கப்படுவோம் இலங்கையில் தமிழ் தேசத்தின் இருப்பு நிச்சயம் காலியாகும் அதை யாராலும் தடுக்கமுடியாது,

அதிதீவிர தமிழ் தேசிய அரசியல் பலம்கொள்வதையும் எழுச்சிகொள்வதையும் அதிதீவிர சிங்கள பெளத்த பேரினவாதமும் விரும்புகிறது இந்திய கொள்கை வகுப்பாளர்களும் விரும்புகிறார்கள் இரண்டும் சேர்ந்தே கடந்தகாலத்தில் எம்மை அழித்தது எம்மை அழித்தவர்கள் இரண்டுபேரும் மீண்டும் நாம் பழைய பாதையில் பயணிக்கவேண்டும் என விரும்புகிறார்கள் ஏன்?

எனவே எமது எதிரிகள் தீர்மானிக்கும் பாதையில் நாம் பயணிக்கப்போகிறோமா?அல்லது எமது எதிரி விரும்பாத ஒரு பாதையில் நாம் பயணிக்கப்போகிறோமா?

எது இராஜதந்திரமானது?
தமிழ்மதி