நோன்பை முன்னிட்டு வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள்

நோன்பை முன்னிட்டு வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் திட்டத்தில் கல்குடா ஜம்இய்யத்துத் தஃவதில் இஸ்லாமிய்யா – தௌஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி மாஞ்சோலை ஹிழ்றியா ஜூம்ஆப் பள்ளிவாயலில் நடைபெற்றது.

கல்குடா ஜம்இய்யத்துத் தஃவதில் இஸ்லாமிய்யா – தௌஹீத் ஜமாஅத் தலைவர் அஷ்ஷேய்க் ஏ.ஹபீப் முஹம்மட் காஸிமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மீன்பிடி நீரியல்வள கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக பொதுச் செயலாளர் அஷ்ஷேய்க் எச்.எல்.எம்.முகைதீன் பலாஹி, கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் அப்துல் ஹமீட், பள்ளிவாயல் தலைவர் எஸ்.எம்.அபூபக்கர், சமுர்த்தி உத்தியோகத்தர் சாஜகான் அஷ்ஷேய்க் ஏ.ஆர்.எம்.நவாஸ் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது மூன்னூறு வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை மீன்பிடி நீரியல்வள கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி வழங்கி வைத்தார்.