காத்தான்குடி மீனவர்களை சந்தித்த மீன்பிடி பிரதியமைச்சர்

காத்தான்குடி வாவி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் காத்தான்குடி முதலாம் குறிச்சி வாவிக்கரையோரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.

காத்தான்குடி வாவி மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள், தேவைகள் தொடர்பாக மீன்பிடி நீரியல்வள கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மீனவர்களின் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது ஷாதுலியா மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் எம்.அப்துல் றஸ்ஸாக், செயலாளர் முஹம்மது பாறூக் உட்பட மீனவர் சங்க பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக அறிந்து கொண்ட பிரதியமைச்சர்; மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தீர்த்து தருவதாக வாக்குறுதியளித்தார்.