கிழக்கின் 25வது பொன்னணிகளின் சமரில் திருக்கோணமலை ஸ்ரீ இ.கி.ச கோணேஸ்வரா இந்துக்கல்லூரி அணி வெற்றிவாகைசூடியது.

பொன்ஆனந்தம்

திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மற்றும் மட்டக்கள் சிவானந்தா வித்தியாலயம் என்பவனற்றுக்கு இடையே நடத்தப்பட்ட 25வது தங்கத்திற்கான சமர் Battle of the Golds”இம்முறை திருகோணமலையில் ஞாயிற்றுக்கிழமைகாலை 9.40 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. திருகோணமலை இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வு மிகவும் கோலாகலமான முறையில் பரபரப்பாகவும் நடைபெற்றன.

இதன்போது இறுதியாக துடப்பெடுத்தாடிய திருக்கோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி அணி உலக கிறிகற் நாயகனான அமைச்சர் அர்சுனா ரணதுங்கவிடமிருந்து வெற்றிக்கிண்ணத்தை தட்டிக்கொண்டது.

முதலில் துடுப்பாட்டத்திற்கான தெரிவுக்காக நடுவர்களால் நாணயம் சுழற்றப்பட்டபோது மட்டக்களப்பு விவேகானந்தாக்கல்லூரி முதலில் துடுப்பாட்டத்திற்காக தெரிவானது இந்நிலையில் சிவானந்தாக்கல்லூரியின் அணியின் தலைவர் எஸ்.பிரதீஸ் தலமையிலான குளுவினர் களத்தில் இறங்கினர்.

நண்பகல் ஒரு மணிவரை நடந்த இறுக்கமான ஆட்டத்தில் சிவானந்த அணியினரின் அனைத்து விக்கற்களும் 49.1 பந்து பரிமாற்றத்தில் வீழ்த்தப்பட்டது.இதன்போது இவ்வணியினர் 156 ஓட்டங்களைப்பெற்றிருந்தனர்.இந்நிலையில் கே.ராகவன் தலமையிலான இந்துக்கல்லூரி அணியினருக்கு வெற்றி இலக்காக 157 ஓட்டங்கள் சிவானந்தாவினால் முன்வைக்கப்பட்டன.

மதிய உணவ இடைவேளையின் பின்னர் திருக்கோணமலை ஸ்ரீ இ.கி.ச. கோணேஸ்வரா இந்துக்கல்லூரி அணி துடுப்பாட்டத்தில் இறங்கியது. ஆட்டம் விறுவிறுப்பாகவே பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தொடர்ந்து நடைபெற்றது.

இறுதியில் 48.4 பந்து சுழற்சியில் அறு விக்கற் இழப்பிற்கு 158 ஓட்டங்களைக்குவித்து திருக்கோணேஸ்வரா இந்துக்கல்லூரி அணி வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கி கொண்டது.

ஆயினும் இரு அணிகளினது விளையாட்டும் ரசிகர்களின் ஆர்வத்தை இம்முறை தூண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் இம்முறை அதிகளவிலான பொலிசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுபாதுகாப்பு ஏற்பாடுகளும் பலமாக காணப்பட்டன.

இறுதி நிழ்வில் பரிசளிப்பின்போது இலங்கையின் கிறிக்கற்றின் முன்னணி நாயகனான அமைச்சர் அர்சுனா ரணதுங்க பிரதம விருந்தினராக கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு கிண்ணத்தை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வில் திருகோணமலை நகரசபைத்தலைவர், ந.இராசநாயகம், மட்டடக்களப்பு, திருகோணமலை வலையக்கல்விப்பணிப்பாளர்களான கே.பாஸ்கரன்,ந.விஜேந்திரன் உள்ளிட்டவர்களும் இருகல்லூரிகளின் அதிபர்களான ரி.யாசோதன், செ.பத்மசீலன் போன்றவர்களின் வழிகாட்டலில் இந்நிகழ்வுகள் நடைபெற்றன.

ஆரம்பத்தில் மட்டக்களப்பு சிவானந்தா அணியினர் கோணேஸ்வரா இந்தக்கல்லூரி அணியினரால் ஊர்வலமாக வரவேற்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இராம கிருஸ்ண சங்க மரபில் உள்ள இவ்விரு பாடசாலைகளும் தமக்கிடையே சகோதரத்துவத்தையும் பரஸ்ரத்தையும் ஏற்படுத்தும் முகமாக 1993ம் வருடம் இப்போட்டி திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடத்தப்பட்டது.

. 15.09.1993ம் வருடம் 20 பந்து பரிமாற்றங்கள் கொண்டதாக மென்பந்தில் ((Softball) இப்போட்டி நடத்தப்பட்டது. பின்னர் அடுத்தவருடமே வருடமே மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இது கடினபந்து போட்டியாக மாற்றம் பெற்று தொடர்ந்து கடின பந்தில் விளையாடப்பட்டு வருகிறது.

திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின்முன்னாள் அதிபர் .சி.தண்டாயுதாணி, அவர்களின் காலத்தில் இப்போட்டிக்கான பிள்ளையார்சுழி போடப்பட்டது. நேற்றுடன் அது 25வது ஆண்டை தாண்டியுள்ளது..

1993, 1995, 1997. 1999,ம் வருடங்களில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினரும், 1994, 1996, 1998ம் வருடங்களில் சிவானந்தா வித்தியாலய அணியினரும் அந்தந்த மாவட்டங்களில் மண்ணின் மைந்தர்களாக வெற்றி பெற்றிருந்தனர்.

2015ம் வருடம் 22வது போட்டியில் சிவானந்தா மைதானத்தில் சிவானந்தா அணியிரும், 2016ம் வருடம் 23வது போட்டியில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினரும், 2017ம் வருடம் 24வது போட்டியில் சிவானந்தா மைதானத்தில் சிவானந்தா அணியினரும் வெற்றிகளை பதிவு செய்துள்ளனர்.

இது வரை நடைபெற்ற 24 போட்டிகளில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினர் 13 தடவைகளும் சிவானந்தா வித்தியாலய அணியினர் 11 தடவைகளும் வெற்றிகளை பெற்றுருந்தனர்.

நேற்றைய ஆரம்ப நிகழ்வின் போது திருகோணமலை நகர முதல்வர் நாகராஜா ராஜநாயகம் பிரதம விருந்தினராகவும், திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் ந.விஜேந்திரன், மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளர் க.பாஸ்கரன், போன்றோர் கௌரவ விருந்தினர்களாகவும், கலந்து சிறப்பித்தனர்..

திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அதிபர் செ.பத்மசீலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இக்கல்லூரி வெற்றி பெற்று சாதனைபடைத்தது. இவர்கள் 48.4 .. பந்து பரிமாற்றத்தில் 6 … விக்கற்களை இழந்து 158.. ஓட்டங்களைப்பெற்றது. குறிப்பிடத்தக்கது.