சவூதியில் விபத்தில் மரணித்த துறைநீலாவணை தேவராசாவின் உடலை கொண்டு வர அரசியல் தலைவர்கள் முன் வரவேண்டும்.

க.விஜயரெத்தினம்)
மத்தியகிழக்கு நாடான சவூதி அரேபியாவுக்கு தொழில் நிமித்தம் சென்ற வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர் அந்நாட்டிலே ஏற்பட்ட விபத்தொன்றில் கடந்த 7.5.2018 திகதியன்று உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் களுவாஞ்சிகுடி பொலீஸ் பிரிவுக்குட்ட துறைநீலாவணை 5ம் வட்டாரத்தை சேந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான துரையப்பா-தேவராசா(44-வயது)எனும் வறுமைப்பட்ட குடும்பத்தை சேர்ந்த தொழிலாளி ஆவார்.

சவூதி அரேபியா தமாம் எனும் நகரத்தில் உள்ள குடிநீர் விநியோகப்கம்பனியில் கடமையாற்றிக் கொண்டிருந்தபோது சாரதியின் கவலையீனத்தால் விபத்தில் சிக்குண்டு பலியாகியுள்ளார்.இவரது பிரேதம் சவூதி அரேபியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இவ்விபத்தில் பலியானவரின் குடும்பத்திற்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த நபரின் குடும்பம் ஆழ்ந்த கவலையுடன் இருக்கின்றது.அன்னாரின் பிரேதத்தை சவூதி அரேபியாவிலிருந்து பிறந்த வசிப்பிடமாகவுள்ள துறைநீலாவணைக்கு எடுத்து வருவதற்கு முயற்ச்சிகளை மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகளோ அல்லது அரசியல்தலைமைகளோ குடும்பத்தின்மீதும்,அன்னாரின் பிரேதத்தின்மீது கரிசனை காட்டவில்லை என்று ஊர்மக்கள்,குடும்த்தினர் கவலை தெரிவிக்கின்றார்கள்.இறந்தவரின் மூத்த மகள் இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கின்ற க.பொ.உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளார்.பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவியின் மனநிலையையும்,பரீட்சையும் கருத்திற்கொண்டு இறந்தவரின் பிரேதத்தை உரிய அதிகாரிகள்,அமைச்சுக்களிடம் தெரியப்படுத்தி துரிதகதியில் மீட்டுக்கொடுப்பதுதான் மட்டக்களப்பு அரசியல்வாதிகளுக்கும்,அரசியல்தலைமைக்கும் இருக்கவேண்டிய தலையாய எண்ணமும் கடற்பாடாகும்.இவற்றுக்கு உதவி செய்ய முடியாதவர்கள் தேர்தல்காலங்களில் படைபட்டாளங்களுடன் பொதுமக்களிடம் சென்று “பூனையை யானையாக்கித் தருவோம்” வாய்கிழிய கத்துவதில் எந்தவித உண்மையுமில்லையென்றும்,வெற்றுக்கோசத்தில் எந்தவித உப்புமில்லை என துறைநீலாவணை கிராமத்தில் உள்ள புத்திஜீவிகள்,இளைஞர்கள்,பொதுமக்கள் கேள்வியெழுப்புகின்றார்கள்.

இச்செயற்பாடானது மரத்தால் விழுந்தவனை மாடேறிக் குத்தும் செயற்பாடாகும்.இனநல்லிணக்கம்,சமாதானம்,ஒற்றுமையை நாட்டிலே இனங்களுக்கிடையில் கட்டியெழுப்ப வேண்டும் என்று ஜனாதிபதி,பிரதமர்,எதிர்க்கட்சித்தலைவர் செயற்படுத்தும் வேலைத்திட்டத்தில் எதுவித பிரயோசனமில்லை என்பதை எடுத்துக் காட்டுவதாகும்.சாதாரண வறுமைப்பட்ட குடும்பத்திற்கே இவ்வாறான நிலையே நாட்டில் உள்ளதை அவதானிக்கலாம்.இவரது பிரேதத்தை சவூதி அரேபியாவிலிருந்து கொண்டுவருவதற்கு சாணாக்கியமுள்ள அரசியல்வாதிகள்,அரசியல்தலைமைகள் கரிசனை காட்டி துறைநீலாவணை கிராமத்திற்கு எடுத்துவருவதற்குரிய முயற்ச்சிகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை முன்வைக்கின்றார்கள்.