காஞ்சிரங்குடா வித்தியாலயத்தில் சாதித்த மாணவிகளின் கல்வி செலவை பொறுப்பெடுத்த சிப்லிபாரூக்.

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்தில் கல்வி கற்று தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட சமூகவிஞ்ஞானப் போட்டியில் முதலிரு இடங்களையும் பெற்று சாதித்த மாணவிகளின் கல்வி செலவுகள் அனைத்தையும் பொறுப்பெடுப்பதாக காத்தான்குடி நகரசபையின் உறுப்பினர் சிப்லிபாரூக் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்தில், தேசியமட்டத்தில் சமூகவிஞ்ஞானப் போட்டியில் முதலிரு இடங்களையும் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை(12) நடைபெற்ற போதே இதனைக் குறிப்பிட்டார்.
காத்தான்குடி நகரசபை உறுப்பினர் தொடர்ந்தும் கூறுகையில்,
இனம், மதம் என்பதற்கப்பால் நட்புரீதியாக எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். அந்நிலையில் காஞ்சிரங்குடா கிராமத்திற்கும் எனக்குமான நட்பு நீண்டகாலமாகவிருந்து வருகின்றது. தேசிய ரீதியாக சாதிப்பதென்பது இலகுவான காரியமல்ல. இக்காரியத்தினை நிகழ்த்தியிருக்கின்ற மாணவர்களையும், அதற்கு வழிகாட்டிய ஆசிரியரையும் பாராட்டுகின்றேன். தரம் – 8லே கல்வி பயில்கின்ற குறித்த இரு மாணவிகளும் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரம் கற்கும் வரை அவர்களுக்கான கற்றல் செலவுகள் அனைத்தையும் நான் பொறுப்பெடுகின்றேன். இவர்களுக்கான கற்றல் செலவுகளை வருடாந்தம் வழங்குவேன் என்றார்.