அனுமதிப்;பத்திரமின்றி மாடு ஏற்றி சென்ற வாகனம் விபத்து. கடமையில் காவல்துறையினர்

அனுமதிப்பத்திரமின்றி மாடு ஏற்றி சென்ற வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் அண்மையில் கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் இடம் பெற்றது.

மணல்பிட்டி வழியூடாக செல்லும் கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் மைதானத்துக்கு அருகில் அனுமதிப்பத்திரங்களின்றி வாகனத்தில் மாடு ஏற்றி சென்ற வாகனம் ஒன்று வீதியில் வந்த முச்சக்கர வண்டி ஒன்றில் மோதியதில் முச்சக்கரவண்டி தலைகீழாக தடம் புரண்டது. அனுமதிப்பத்திரம் மட்டுமன்றி அவ்வாகனத்தில் ஏற்றி சென்ற மாடுகளுக்கு எதுவித காதடையாளங்களுமில்லாது காணப்பட்டதாகவும் வாகன சாரதி விபத்தை அடுத்து தப்பி செல்ல முனைந்த போது பாதசாரிகளால் தடுத்து கொக்கட்டிச்சோலை காவல் துறையினரிடம் கையளித்துள்ளனர் அவ்விடத்திற்கு விரைந்த காவல் துறையினர்; மேலதிக விசாரணைகளை நடாத்தியுள்ளனர்.