ஏறாவூர்ப்பற்று பிரதேச விளையாட்டு விழா

0
1152

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயகமும் கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களமும் இணைந்து நடாத்திய ஏறாவூர்ப்பற்று பிரதேச விளையாட்டு விழா பிரதேச செயலாளர் நல்லையா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் 2018.05.10 வியாழக் கிழமை ஆறுமுகத்தான் குடியிருப்பு காந்தி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

அதிதிகளை வரவேற்றல், தேசியக் கொடியேற்றல், தேசிய கீதம் இசைப்பித்தல், ஒலிம்பிக் சுடரேற்றல், சத்தியப் பிரமாணம் செய்தல் போன்றவற்றுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வுளைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளும் இடம்பெற்றன. கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கிடையிலான போட்டிகளும் வெற்றியீட்டியவர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

மேலும் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி மற்றும் கபடி கண்காட்சி என்பனவும் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் கலந்து சிறப்பித்தார்.