காரைதீவில் நடுத்தெருவில் வீசப்பட்ட வயோதிபர் புத்தளத்தை சேர்ந்தவராம்

(சகா)
 
காரைதீவில் பட்டப்பகலில் ஆட்டோவில்கொண்டுவந்து வீசப்பட்ட அந்த வயோதிபர் புத்தளத்தைச் சேர்ந்தவர் என இனங்காணப்பட்டுள்ளார்.
 
அவரது பெயர் தெய்வநாயகம் என கூறப்பட்டுள்ளது. அவரை அவரது அண்ணரின் மகன் வந்து ஆஸ்பத்திரியிலிருந்து தனது பொறுப்பில் மேலதிக சிகிச்சைக்காக அழைத்துச்சென்றுள்ளார்.
 
ஊடகங்களில் வெளியான செய்தியையடுத்தே எனது சித்தப்பாவை இனங்காணமுடிந்தது என அவரது அண்ணரின்மகனான விஜயா தெரிவித்தார். இவர் மட்டக்களப்பு தாழங்குடாவைச்சேர்ந்தவர். 
 
இவரது மகன் கட்டாரில் இருக்கிறார். அவர் ஊடகத்தைப் பார்த்து தமக்கு அறிவித்ததையடுத்தே நான் இங்குவந்தேன் எனக்கூறினார் விஜயா.
தெய்வநாயகம் திராய்க்கேணியில் பிறந்தவர். அங்கு 90களில் அங்கு இடம்பெற்ற இனக்கபளீகரத்தை நேரடியாகப்பார்த்ததால் சுயசித்தத்தை சிறியளவில் இழந்துள்ளார்.
 
அதன்பின்னர் அவரை புத்தளத்திற்கு அழைத்துச்சென்று வைத்திருந்ததாகவும் நாளொன்றுக்கு அவரதுபாட்டில் சுமார் 20மைல் நடந்துசெல்வார். 
இந்தநிலையில்தான் இப்பிரதேசத்திற்க வந்திருக்கக்கூடும். உண்மையில் இறுதிக்கட்டத்தில் என்ன நடந்து என்பது பற்றித் தெரியாது.
 
எனினும் நடுத்தெருவில் கிடந்த தனது சித்தப்பாவை பாதுகாப்பாக ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றுசேர்த்த காரைதீவு தவிசாளர் ஜெயசிறிலுக்கும் ஆஸ்பத்திரி உத்தியோகத்தர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றியைத்தெரிவிக்கிறார்.