பிரதியமைச்சராக பதவியேற்றார் பா.உ அலி சாஹிா் மௌலானா படங்கள்.

தேசிய நல்லிணக்க சகவாழ்வு மொழிகள் அபிவிருத்தி பிரதியமைச்சராக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லீம் காங்கிரஸ் பா.உ அலி சாஹிா் மௌலானா இன்று (10) நரேகேன்பிட்டி நாவலையில் உள்ள சகவாழ்வு நல்லிணக்க அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இந் நிகழ்வில் அமைச்சா்களான மனே கனேசன், ரவுப் ஹக்கிம் மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் பா.ம. உறுப்பிணா்கள் பிரதியமைச்சகளும் கலந்து கொண்டனா்.

இங்கு உரையாற்றிய பிரதியமைச்சா் அலி சாகிா் மௌலானா –

இந்த அமைச்சினைப் பெற்றுத்தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதமா் ,முஸ்லீம் காங்கிரஸ் தலைவா் ரவுப் ஹக்கீம் ஆகியோறுக்கு நன்றி தெரிவித்தாா்.

அத்துடன் ஜனாதிபதி நேற்றும் கூட தனக்கு தொலைபேசியில் பேசி இந்த அமைச்சின் நிறைய மூவினங்களுக்கும் சேவைசெய்யும் ஒரு அமைச்சு, இளைஞா்கள், பாடசாலைமாணவா்கள்,  இனங்களுக்கிடையிலான தேசிய ஜக்கியம் சகவாழ்வினை ஏற்படுத்க் கூடிய அமைச்சு அத்துடன் இவ் அமைச்சிக்கு நிறைய நிதி மற்றும் வெளிநாட்டு நிதிகள் உள்ளன. அத்துடன் 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிப்பதற்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது. இவ் அமைச்சின் கீழ் இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி, முன்னாள் ஜனாதிபதியின் ஒரு தேசிய சகவாழ்வு நிறுவனமும் உள்ளன. அமைச்சா் மனோ கனேசனுடன் இனைந்து வடக்கு கிழக்கில் என்னால் செய்யக் கூடிய அபிவிருத்திகளை 18 மாத காலத்திற்குள் துரிதமாக செயல்படுத்துவேன் என தெரிவித்தாா் .

அஷ்ரப் ஏ சமத்