மாதத்தின் முதல்சம்பளம் மட்டுமல்ல அனைத்து சம்பளமும் ஏழைகளுக்கே. கமலநேசன்.

வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கோறளைப்பற்று செயலாளருமான கனகரெட்ணம் கமலநேசன் தனது உறுப்பினருக்கான முதலாவது சம்மபளத்தினை விசேட தேவையுடைய குடும்பத்திற்கு வழங்கினார்.

வாழைச்சேனை பிரதேச சபையினால் வழங்கப்பட்ட முதலாவது சம்பளப்பணம் பதினையாயிரம் ரூபாவினை நாசிவந்தீவை பிறப்பிடமாக கொண்ட கணவனின் உதவியற்ற விசேட தேவையுடைய இரட்டை குழந்தைகளின் தாயான கணபதிபிள்ளை சரோஜா என்ற யுவதிக்கு செவ்வாய்கிழமை மாலை வழங்கி வைத்தார்.

குறித்த யுவதியின் வீட்டு சுற்றுச் சூழல் சிரமதானம் செய்து கொடுக்கப்பட்டதுடன், வளவினுள் வேலியடைப்பதற்கான செலவீனத்திற்கு குறித்த முதலாவது சம்பளப் பணம் வழங்கப்பட்டது.

2016ம் நாசிவன்தீவுக்கு சித்திரை வருடத்துக்கு கஷ்டப்பட்டவர்களுக்கு ஆடை வழங்க சென்ற போது இந்த சகோதரியை சந்தித்த போது இவர் ஒரு விசேடதேவையுடையவர் தாய் தந்தை அற்றவர் தனியாக வாழ்த்து வந்தவர் ஏதும் அறியா நிலையில் இரட்டைக் குழந்தைகளைப்பெற்று பரிதாகரமான வாழ்க்கை வாழ்த்து வருகின்றார்.

அவருடைய நல்வாழ்வுக்காக எம்மால் முடிந்த உதவிகளை செய்கின்றோம் அந்த வகையில் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினராகிய நான் எனது முதல் சம்பளத்தை அவருக்கும் குழந்தைகளின் நல்வாழ்வுக்கும் அன்பளிப்பாக வழங்கினேன்.

அத்தோடு எனக்கு ஒவ்வொரு மாதமும் உறுப்பினருக்காக கிடைக்கும் சம்பளத்தினை கொண்டு வறிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கும், வறியவர்களின் வாழ்வாதார நடவடிக்கைக்கும் என்னால் உதவிகள் மேற்கொள்ளப்படும் என வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கோறளைப்பற்று செயலாளருமான க.கமலநேசன் தெரிவித்தார்.

தற்காலத்தில் அரசியல்வாதிகள் தங்களுடைய சம்பளத்தில் ஓரளவு தொகையினை மக்களுக்கு உதவி செய்து வரும் நிலையில் வாழைச்சேனை பிரதேச சபையினால் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட முதலாவது சம்பளப்பணத்தின் முழுவதையும் செலவு செய்வதானது அளப்பரிய சேவையாகும்