அகில இலங்கை உதைபந்தாட்ட புதிய நடுவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

அகில இலங்கை உதைபந்தாட்ட நடுவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (06) கொழும்பு 7ல் அமைந்துள்ள உதைபந்தாட்ட இல்லத்தில் நடைபெற்றது. நாடளாவிய ரீதியில் தோற்றிய 375 பரீட்சார்த்திகளுக்கு தை மாதம் நடாத்தப்பட்ட பரீட்சையில் செய்முறை மற்றும் பாட விடயம் தொடர்பான எழுத்துப்பரீட்சைகளில் சித்தியடைந்த 123 பேருக்கு இலங்கை உதைபந்தாட்ட நடுவர் சம்மேளனத்தின் நடுவர்கள் என சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இலங்கை உதைபந்தாட்ட நடுவர்கள் சம்மேளனத்தின் தலைவர் தேசப்பிரிய அவர்களின் தலைமையில் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் அனுர டி சில்வா அதிதியாக கலந்து கொண்டிருந்தார். இதன்போது முன்னாள் உதைபந்தாட்ட நடுவர் சம்மேளன தலைவர் A.M.யாப்பா அவர்களின் ஓய்வு நிலையினை சிறப்பித்து தங்க மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.