நினைவேந்தல் செய்வதற்காக யாரிடம் அனுமதி பெறவேண்டும் .

எமது மண்ணிக்காக போராடிய நாம் நினைவேந்தல் செய்வதற்காக யாரிடம் அனுமதி கேட்க வேண்டும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி. இன்பராசா.

(டினேஸ்)

இறுதிக்கட்ட யுத்தம் முற்றுப் பெற்ற நாளான 18.05.2009 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்தேறிய அவலங்கள் உயிர் நீத்தவர்களுக்காக எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பான மட்டக்களப்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் இது தொடர்பாக விமர்சிக்கையில்.

ஈழப் போராட்டத்தில் இறுதிக்கட்ட யுத்தம் கிழக்கிலேயே ஆரம்பிக்கப்பட்டது மாவிலாறு பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்றது இது யாவரும் அறிந்ததே ஆகையினாலேயே நாம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிப்பு நிகழ்வை வாகரை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பால்ச்சேனை பகுதியில் நினைவுகூற ஏற்பாடுகள் செய்துள்ளோம்.

அந்தவகையில் இந்நினைவேந்தல் நிகழ்வில் எமக்காக கிழக்குப்பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் இளைஞர் ஒன்றியம் வாகரை இளைஞர்கள் மற்றும் எமது புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் எமக்கு ஆதரவு வழங்குவதற்காக முன்வந்துள்ளனர்.

அத்துடன் இந்நினைவேந்தல் நிகழ்வில் யாவரும் இன மத பிரதேச வேறுபாடுகள் இன்றி உயிர் நீர்த்த உறவுகளுக்காக நினைவுகூற வேண்டுகோள் விடுப்பதுடன் இதனை சாதகமாக சுயநலம் காண சிலர் முற்படுகின்றனர் அந்தவகையில் வடக்கில் நடைபெறும் நிகழ்வுகளை பிரித்து நடத்த வேண்டாம் அனைவரும் ஒன்றித்து நடாத்த வேண்டும் எமது மண்ணிக்காக போராடிய நாம் நினைவேந்தல் செய்வதற்காக யாரிடம் அனுமதி கேட்க வேண்டும் ஆகையினால் இந்நினைவேந்தல் நிகழ்வை வாகரை பால்ச்சேனை பகுதியில் ஏற்பாடு செய்து சிறப்புற நடாத்த எமது புலம்பெயர் உறவுகள் மற்றும் மாவீரர் பெற்றோர்கள் முன்னாள் போராளிகள் அனைவரையும் ஒன்று சேர்ந்து ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என அவர் கருத்துத் தெரிவித்தார்

இப்பத்திரிகையாளர் சநதிப்பின் கட்சியின் ஊடக பேச்சாளர் ஜோன்சன் மற்றும் ஆலோசகர்கள் வாகரை வாழ் பிரதேச மக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.