திருமலையில் சாதனை படைத்த மட்டக்களப்பு பாடசாலைகள்

கிழக்குமாகாணபாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற பெண்களுக்கான எல்லே விளையாட்டுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டப்பாடசாலைகள் முதல்மூன்று இடங்களையும் பெற்று தேசியமட்டத்துக்கு தெரிவாகியுள்ளனர்.

இதனடிப்படையில் மண்டூர் 13ம் கொலனி விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம் ,ம2ம்இடத்தினையும் முறக்கொட்டான்சேனை இ.கி.மிசன் மகாவித்தியாலயம், 1ம்இடத்தினையும் களுதாவளைமகாவித்தியாலயம் 3ம் இடத்தினையும் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இதனடிப்படையில் களுதாவளை மகாவித்தியாலயம் 20வருடங்களுக்குப்பின் இப்போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறிப்பிட்ட பாடசாலைகளின் வெற்றிக்காக உழைத்த ஆசிரியர்களுக்கும் பாடசாலைகளின் அதிபர்களுக்கும்  supeedsam.comதனது பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கின்றது