மட்டக்களப்பு – பெரியபுல்லுமலை புனித செபமாலை மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா

கிழக்கு மாகாணத்தில் பாரம்பரிய கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு – பெரியபுல்லுமலை புனித செபமாலை மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (06) திருப்பலி ஒப்புக்கொடுத்தலுடன் நிறைவுபெற்றது.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் வண பென்னையா ஜோசப் தலைமையில் நடைபெற்ற திருப்பலி ஒப்புக்கொடுக்கும் நிகழ்வில் மாவட்ட தேவாலயங்களின் அருட் தந்தையர்கள் அருட் கன்னியர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்லரெட்னம் மற்றும் இன வேறுபாடுகளின்றி நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பொரும் திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.