கிழக்குமாகாண தொண்டராசிரியர்கள் 1050பேரில் 300பேரே தகுதி! ஆனால் 445பேருக்கு அமைச்சரவை அனுமதி உண்டு!

சகா)
கிழக்கு மாகாண தொண்டராசிரியர் நேர்முகப்பரீட்சைக்குத் தோற்றிய 1050பேரில் ஆக 300பேரே தேவையான போதுமான தகுதியைப் பெற்றுள்ளனர் எனத் தெரியவருகிறது.

 
ஆனால் அமைச்சரவை அனுமதியின் பேரில் கல்வியமைச்சின் பணிப்பிற்கிணங்க கிழக்குமாகாணத்தில் 445 தொண்டராசிரியர்களை ஆசிரியஉதவியாளர்களாக நியமிப்பதற்கு அனுமதியும் அங்கீகாரமும் உண்டு என கிழக்கு மாகாண கல்வியமைச்சின்செயலாளர் பி.திசாநாயக்க தெரிவித்தார்.
 
ஆனால் கடந்த 21ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை கிழக்குமாகாண கல்வியமைச்சில் நடைபெற்ற நேர்முகப்பரீட்சையில் தோற்றிய 1050பேரில் ஆக 300பேரளவில்தான் தேவையான தகுதிகளைப்பெற்றுள்ளனர். 
 
நேர்முகப்பரீட்சைக்குத்  தோற்றியவர்களில் பெரும்பாலானோர் 45வயதைக்கடந்தவர்கள் என்றும் பாடசாலைகளிலிருந்து  போதுமான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லையெனவும் தெரியவருகின்றது.
 
அமைச்சரவைத்தீர்மானத்திற்கமைவாக 45வயதுக்குட்பட்ட 2005 2006 2007 காலப்பகுதியில் குறைந்தது 3வருடகால சேவையினைக்கொண்டிருத்தல்வேண்டுமென்பது குறைந்த பட்ச தகுதிகளாகும்.
 
எதுஎப்படியிருப்பினும் தொண்டராசிரியர்களை ஆசிரிய உதவியாளர்களாக நியமிப்பது தொடர்பில் இறுதி முடிவெடுப்பது மத்திய கல்வியமைச்சு என்பது குறிப்பிடத்தக்கது.