நாளை மட்டக்களப்புக்கு வரும் எங்கள் ஜனாதிபதியே

நாளை மே 7ம் திகதி மேதின நிகழ்வுக்காக தாங்கள் மட்டு நகர் வருகின்றீர்கள், தங்களை வரவேற்பதில் நானும் பெருமை அடைகின்றேன். தங்கள் வரவு நல் வரவாகட்டும்.

நாங்கள் இந்த நேரத்தில் மீண்டும் ஒரு விண்ணப்பதை முகநூல் வாயிலாகத் தங்களிடம் சமர்ப்பிக்கின்றோம்.

29.03.2018 ம் திகதி ஆனந்தசுதாகரனது விடுதலை தொடர்பாக 52,000 கைஎழுத்துக்களை நாம் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து சேகரித்துத் தங்களிடம் நேரடியாகச் சமர்ப்பித்திருந்தோம்.

#_ஆனந்தசுதாகரனது_விடுதலை
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

சித்திரைப் புத்தாண்டுக்கு
அப்பா வருவார் எனப் பிள்ளைகளும்

வெசாக் தினத்தில்
ஆனந்தசுதாகரன் வருவார் என நாங்களும்

எதிர்பார்த்திருந்தோம் – வரவில்லை

தற்போது……

இந்த மே தின உரையிலாவது ஆனந்தசுதாகரனது விடுதலைபற்றி தாங்கள் உரையாற்றுவிர்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

மகளது மனநிலை பாதிக்கப்படும் என்ற காரணத்தால் விமல் வீரவன்சவை விடுதலை செய்தபோது தங்களது தந்தை உள்ளத்தைப் புரிந்துகொண்டோம்.

நானும் ஒரு தந்தையாக தங்களிடம் யாசிப்பது ஆனந்தசுதாகரனது விடுதலை

கௌரவ அதிமேதகு ஜனாதிபதி அவர்களிடத்தில் நம்பிக்கை வைத்தே ஆனந்த சுதாகரனின் விடுதலைக்காக இலங்கையில் பல இடங்களில் கையெழுத்து சேமித்து கருனை மனு கொடுக்கப்பட்டது. வடக்கு,கிழக்கு மக்களின் வாக்குகளால்தான் நான் ஜனாதிபதியாக நிக்கிறேன் என மாவடிவேம்பில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.வாக்களித்த மக்களின் கோரிக்கையை நிராகரித்ததேன்…? சுதாகரனின் பிள்ளைகளிடமும் வாக்கு கொடுத்தார்.எங்கள் நம்பிக்கை எல்லாம் மணல் வீடாகுமா…?அல்லது மாடி வீடாகுமா…..?

முகப்புத்தக பதிவுகள்.