வந்தாறுமூலையில் நுண்கடன் குடும்பத் தகராறுகள் காரணமாக ஒரு பிள்ளையின்தாய் சாவு

 

நுண்கடனினால் ஏற்பட்ட குடும்பத் தகராறுகள் காரணமாக இன்றைய தினம் (05.05.2018) காலை ஆறு மணியளவில் கிருஷ்ணன் கோயில் வீதி, வந்தாறுமூலையை வதிவிடமாகக் கொண்ட திருமதி. அழகரெத்தினம் டிசாந்தினி(24வயது) என்கின்ற ஒரு பிள்ளையின் தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்

இவ்வாறான நிலையில் மேற்குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறித்த பிரதேசத்தில் ஆழ்ந்த சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சடலம் சட்ட வைத்தியரின் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேற்படி சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை எமது மாவட்டத்தில் நுண்கடன் தொல்லைகளால் ஏழு பேர் தற் கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே எங்கள் பிரதேசத்திற்கு நுண்கடன் தேவையா? இப்படியான இழப்புக்கள் தேவையா? என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணம்.

“நுண்கடன் திட்டத்தை எமது கிராமத்தில், பிரதேசத்தில் இருந்து முற்றாக ஒழித்து பெறுமதியான உயிர்களைக் காப்போம்!”
“முயன்றால் முடியாதது எதுவுமில்லை”

நுண்கடன் பிரச்சனைகளால் அழிந்து வரும் இளம் சமூகம்..

தயவுசெய்து இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து விலகி கொள்ளுங்கள். .
முன்னொரு காலங்களில் இவ்வாறான நுண்கடன் வசதிகள் இல்லாத போது மக்கள் வாழவில்லையா?
நாளுக்கு நாள் புது புது நிறுவனங்கள் உருவாகிக் கொண்டு நுண்கடன் என்ற பெயரில் மக்களின் மீது சுமைகளை திணித்துக்கொண்டு இருக்கின்றனர்..

மாத கடன் வசதி  இப்போது நாள் கடன் வசதி என்று நாளுக்கு நாள் கடன் பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது…

சிந்தித்து செயற்படுங்கள். ..
கடன் என்பது வாழ்வாதாரத்தை உயர்த்த பயன்படுத்துங்கள்.. இல்லையேல் அந்த கடன் எண்ணத்தை விட்டுவிடுங்கள்..
சுயதொழிலுக்கென கடனை பெற்று யாருமே சுயதொழில் செய்வது கிடையாது… இதுதான் இன்றைய நிலமை.. கடன் வழங்க வரும் நிறுவனங்களை தங்களது பிரதேசங்களில் தவிர்த்து கொள்ளுங்கள்…

கடனால் உங்கள் வாழ்வாதாரம் உயருமாயின் அது வரவேற்க்கத்தக்கது . ஆனால் இன்றைய நிலைமையில் இதை காண்பது அரிது.. அதனால் சிந்தித்து செயற்படுங்கள்

Thanks

Battigate