திருமலை மட்டக்களப்பு எல்லைக்காணிகளுக்குச் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவும்.

பொன் ஆனந்தம்

பொலநறுவை மாவட்டத்திற்குள் வரும் மாவில்,மற்றும் அங்கோடை வெளிகளில் வயல் செய்து வரும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் காணிகளுக்கு செல்ல வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோருவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் வெருகல்பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வாழைத்தோட்டம் ஆனைத்தந்தி பிள்ளையார் ஆலய முன்றலில் கூட்டம் ஒன்று நடைபெற்றன.

இவ்வயல்பிரிவுகளில் விவசாயம் செய்துவரும் விவசாயிகளைப் பிரதிநிதித்துவப்படும் மாவில்,அங்கோடை,வைரவர் விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இக்கூட்டம் சம்மேளனத்தின் தலைவர் க.திருநாவுக்கரசு தலமையில் நடைபெற்றன

இக்கூட்டத்திலேயே மாவில்,மற்றும் அங்கோடை வெளிகளில் வயல் செய்து வரும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் காணிகளுக்கு செல்ல வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோருவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுபற்றி இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாவது,குறித்த வயல்பிரதேசங்களில் 75வருடங்களுக்கு மேல் நாம் விவசாயம்  செய்து வருகின்றோம். கடந்த 2017 இலிலும் சிறுபோகம் செய்கை பண்ணியிருந்தோம்.

கடந்த இருவராங்களுக்கு முன்னர் வெலிகந்த பிரதேசத்தில் உள்ள வனஜிவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த வயல்காணிகள் வனஜீவராஜிகள் திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவித்திருந்தார்

இதனையடுத்து கடந்த 03.03.2018 அன்று எமது சம்மேளனப்பிரதிநிதிகள் வெலிகந்த வில் உள்ள திணைக்களத்திற்குச்சென்று எமது நிலமைகளை தெரியப்படுத்தியதுடன் காணிகளுக்கான உறுதிகள், ஒப்பங்கள் இருப்பதாகவும் குறித்த அதிகாரியான வணசிங்க அவர்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தோம்.

இதன்போது பதிலளித்த அவர் ,குறித்த பிரதேசம் கடந்த 1986இல் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு என பிரகடனம் செய்யப்பட்டிருப்பதாகவும் யுத்தம் காரணமாக அவை முறையாக உங்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்ததுடன், உரிய ஆவணங்களுடன் பின்னர் சந்திப்பதெனவும் முடிவெடுக்கப்பட்டது.

இதற்கிணங்க கடந்த 03.04.2018 அன்று கறித்த வயல்பிரதேசத்திற்கு விவசாயிகள் சென்றதுடன் வன ஜீவராஜீகள் திணைக்கள அதிகாரிகளும் வருகைதந்தவேளை வயல்காணிகள் காண்பிக்கப்பட்டன. ஆவணங்கள் சிலவும் காண்பிக்கப்பட்டன.

அத்துடன் இந்த மாதம் வயல் செய்கைக்கான பணி ஆரம்பிப்பதற்கான காலம் வந்துள்ளதால் ஆரம்ப பணிகளை ஆரம்பிக்கவுள்ளோம் என விவசாயிகள் சார்பில் தெரியப்படுத்தினோம்

ஆனாலும் உயர் மட்டத்திற்கு குறித்த விடயத்தை தெரியப்படுத்தி முடிவை அறியத்தருவதாகவும் ஒரு 10 தினங்கள் பொறுக்குமாறு வன ஜீவராசிகள் அதிகாரியான வனசிங்க தெரிவித்தார்.

இந்நிலையில், இக்கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. எனவும் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் வெருகல்பிரிவில் உள்ள குறித்த வயல்களில் செய்கையிலீடுபடும் விவசாயிகளும், வாகரைப்பிரிவில் உள்ள விவசாயிகளும் ஆக 37பேர் வரையில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் மாவில்,மற்றும் அங்கோடை வெளிகளில் வயல் செய்து வரும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்ப மாவட்ட விவசாயிகளின் காணிகளுக்கு செல்ல வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோருவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் இம்மாதம் விரைவில் செய்கைகான பணிகளை ஆரம்பிப்பதற்கான முடிவும் எடுக்கப்பட்டுள்ளன.மட்டுமன்றி இதுதொடர்பாக அரசியல் தலைவர்களின் தலையீட்டை எற்படுத்தவும் அவர்கள் மிக விரைவாக தலையிட்டு காணிகளை தொடர்ந்து செய்கை பண்ணுவதற்கான முடிவை எடுத்து தரவேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது. இவ்வயல் வெளிகளில் 150 இற்கும் அதிகமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முறையிடப்பட்டுள்ளது. இது விடயமாக உயர்மட்டத்திற்கு வன ஜீவராசிகள் திணைக்களமும் அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் சம்மேளனத்திற்கு அறிவித்துள்ளது.