மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் விருது வழங்கள்.

க. விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூகமேம்பாடு மையத்தின் 5ம் ஆண்டு நிறைவு விழாவும்,”சமூக ஜோதி” விருது வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் பாவலர் சாந்தி முஹியித்தீன்(JP) தலைமையில் சனிக்கிழமை(5.5.2018) காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம்-உதயகுமார் அவர்களும்,கௌரவ அதிதியாக சிரேஸ்ட சட்டத்தரணி வ.விநோபா இந்திரன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.இதன்போது 40 பேர் “சமூக ஜோதி” விருதினையும்,தேசிய விருதினை பாவலர் சாந்தி முஹியித்தீன் தேசிய விருதையும் பெற்றிருந்தார்.சமூகஜோதி பெறும் இவர்களை அரசாங்க அதிபர் மா.உதயகுமார் பொன்னாடை போற்றி நினைவுச்சின்னங்கள் ,சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.சித்தவைத்தியம்,சமூகசேவை,இனநல்லிணக்கம்,சீரான உறவு,கல்விப்பணி செய்தவர்களை பாராட்டி கௌரவிக்கப்பட்டது.