மகிழவெட்டுவான் மாணவி தேசிய சாதனை.

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மகிழவெட்டுவான் மகா வித்தியாலய மாணவி சமூகவிஞ்ஞானப் போட்டியில் தரம் – 8வகுப்பில் தேசிய ரீதியில் முதலிடத்தினைப் பெற்று சாதனைப்படைத்துள்ளார்.

குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் க.நிலாஜினி என்ற மாணவியே இச்சாதனையை நிலைநாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலையின் வரலாற்றில் இதுவரை தேசியசாதனைகள் எதுவும் பெறப்படாத நிலையில் இச்சாதனை புரியப்பட்டுள்ளமை எடுத்துக்காட்டத்தக்கது.

குறித்த மாணவியின் வெற்றிக்காக வழிகாட்டிய, பயிற்றுவித்த ஆசிரியர் ந.நவநீதன், அதிபர் ம.கருணாகரன் ஆகியோருக்கு பாடசாலை சமூகத்தினர் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டனர்.