படுவான் சம்பியன் லீக் 1ம் சுற்றில் 5 அணிகள்

கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக் கழகம் முதன் முறையாக படுவான்கரையில் நடாத்தும் உதைபந்தாட்ட லீக் போட்டிகள் பங்குனி மாதம் தொடக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு (2017) நடைபெற்ற போட்டிகளில் 1ம் இடங்களை பெற்ற அணிகளை ஒன்றித்து நடாத்தப்படும் லீக் போட்டிகளில் 7 அணிகள் பங்கு கொண்டுள்ளன. இதுவரை நடைபெற்றுள்ள 1ம் சுற்று போட்டிகளில் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக் கழகமும் குருந்தையடிமுன்மாரி ரென் ஸ்டார் அணியினருக்குமான போட்டி நடைபெறவுள்ள அதே வேளை புள்ளிகள் அடிப்படையில் 7 அணிகளும் பெற்றுள்ள நிலை வருமாறு

முதலைக்குடா விநாயகர் 12
குருந்தையடிமுன்மாரி ரென் ஸ்டார் 11
அரசடித்தீவு விக்கினேஸ்வரா 11
முனைக்காடு இராமகிருஸ்ணா 08
கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா 06
காஞ்சுரங்குடா ஜெகன் 04
சில்லிக்கொடியாறு பராசக்தி 02

முதன் முறையாக படுவான்கரையில் நடைபெறும் இவ் லீக் போட்டிக்கு “படுவான் சம்பியன் லீக்” எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும், இறுதிப் நிகழ்வுகள்; படுவான் சமரின் போது நடைபெறும் எனவும் ஈஸ்வரா விளையாட்டுக் கழக தலைவர் சி.தசியந்தன் தெரிவித்துள்ளார்.