கொக்கட்டிச்சோலையில் 26கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட இளைஞர் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(04) மாலை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இளைஞர்சேவை உத்தியோகத்தர் அ.தயாசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட இரண்டு சகோதர சிங்கள இளைஞர் கழகங்கள் உட்பட 26இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் 2017ம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் கீழ், 260,000ரூபா செலவில் இப்பொருட்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பிரதேசத்தில் முதன்முறையாக 26இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைத்தமை முதற்தடவையெனவும் இதன்போது, இளைஞர் சேவை உத்தியோகத்தர் அ.தயாசீலன் தெரிவித்தார்.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மண்முனை தென்மேற்கு தவிசாளர் சீ.புஸ்பலிங்கம், உதவி தவிசாளர் பொ.கோபாலபிள்ளை, மாவட்ட இளைஞர் சேவை உதவிப்பணிப்பாளர் ஆல்தீன் கமீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.