க.பொ.த சாதாரண தர பரீட்சை – விண்ணப்ப படிவங்கள் எதிர்வரும் 15ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்

2018 டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்ப படிவங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் எதிர்வரும் 15ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

பாடசாலை அதிபர்களிடம் உரிய தினத்திலோ அதற்கு முன்னதாகவோ விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வி.சனத் பூஜித்த வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விண்ணப்பப்படிவங்களை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளமுடியும்.