அபிவிருத்தியின் மந்தகதிக்கு உயரதிகாரிகளே காரணம் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவிப்பு

நாட்டின் அபிவிருத்தியில் பங்களிப்பு செய்கின்ற உயரதிகாரிகளின் கவலையீன குறைபாடே அபிவிருத்தியின் மந்தகதிக்கு காரணம் என பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் 02.05.2018 அன்று நடைபெற்ற போதே பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தெரிவித்தனர். திணைக்களங்களின் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் விடுவதனால் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்டாமலுள்ளது. கடந்த கூட்டங்களின் போது திணைக்களங்களில் இருந்து கலந்து கொள்கின்ற உத்தியோகத்தர்களிடம் கேள்விகளை கேட்கின்ற போது திணைக்கள அதிகாரியிடம் கேட்டு சொல்கின்றோம் என பதில் வழங்கப்பட்டு வந்ததே தவிர எமது பிரதேசத்தில் முன்வைக்கப்பட்ட அபிவிருத்திகள் எதுவும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. கௌரவ ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கமைய திணைக்கள அதிகாரிகள் அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனினும் அந்நிலையினை இன்று வரை சில திணைக்கள உயரதிகாரிகள் கடைப்பிடிக்காமையினால் அபிவிருத்தி செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இதனை கவனத்தில் கொண்டு அபிவிருத்தி குழுத் தலைவர்கள் செயற்பட வேண்டுமெனவும் கோரப்பட்டது.

கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஞா.சிறிநேசன், ச.வியாNpந்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர்கள் கலந்து கொண்டிருந்தததுடன் வருகை தராத திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு விளக்கம் கோருமாறும் பிரதேச செயலாளரை பணித்தனர்.