கடற்தொழில் நீரியல் வள கிராமிய பொருளாதார அமைச்சர்கள் கடமைகளை பொறுப்பேற்றனர்

கடற்தொழில் நீரியல் வள கிராமிய பொருளாதார அமைச்சர், இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் ஆகியோர் தங்களது கடமைகளை இன்று வியாழக்கிழமை கடற்தொழில் நீரியல் வள மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சில் பொறுப்பேற்றனர்.

இதன்போது கடற்தொழில் நீரியல் வள கிராமிய பொருளாதார அமைச்சர் வஜித் விஜிதமுனி சொய்சா, இராஜாங்க அமைச்சர் துலிப் வேத ஆராய்ச்சி, பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் தங்களது கடமைகளை பொறுபேற்கும் நிகழ்வு இல.492, ஆர்.ஏ. டி மெல் மாவத்தை கொழும்பு – 03 எனும் முகவரியில் அமைந்துள்ள கடற்தொழில் நீரியல் வள மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக முன்னாள் கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, முன்னாள் விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, அமைச்சின் செயலாளர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இங்கு சமய பெரியார்களின் மத அனுஸ்டானங்கள் இடம்பெற்றதன் பிற்பாடு கடற்தொழில் நீரியல் வள கிராமிய பொருளாதார அமைச்சர், இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் ஆகியோர் தங்களது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.