மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்ற நாட்டியாஞ்சலி

க. விஜயரெத்தினம்)
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 126 ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டும்,சர்வதேச நடன தினத்தை முன்னிட்டும் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட “நாட்டியாஞ்சலி” நிகழ்வு மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் வியாழக்கிழமை(3.5.2018)மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராசா-சரவணபவான் அவர்களும் பாரியாரும்,கௌரவ அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.குணநாதன் ,மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் என்.மணிவண்ணன் அவர்களுடன் மட்டக்களப்பு மாநகரசபை பிரதி ஆணையாளர் ரீ.தனஞ்சயன்,பிதிக்கல்வி பணிப்பாளர்களான திருமதி.சங்கரி கங்கேஸ்வரன்,எஸ்.எம் ஹைதரலி உட்பட கோட்டக் கல்விப்பணிப்பாளர்கள்,உதவிக்கல்விப் பணிப்பாளர்கள்,அதிபர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் கலந்துகொண்டார்கள்.

இந்த நாட்டியாஞ்சலி நிகழ்வில் விநாயகஸ்துதி,குருதோஸ்தரம்,த்யானஸ்லோகம்,நமஸ்காரம்,தேவாரம்,விபுலானந்த சமர்ப்பணம், புஸ்பாஞ்சலியுடன் அலாரிப்பு,தாண்டவ கணபதி,அஸம்யுத ஹஸ்தம்,ஜதீஸ்வரம்,ஸம்யுத ஹஸ்தம்,மட்டுநகர் வாவியிலே,சிரோ திருஸ்டி கிறீவாபேதம்,மீன்மகள் பாடுகின்றாள்,தில்லானா,மங்களம்,இலங்கை என்பது போன்றன இடம்பெற்றன.
இந்த நாட்டியாஞ்சலி நிகழ்வில் ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றார்கள்.நாட்டியாஞ்சலி நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கும்,நாட்டிய ஆசிரியர்களுக்கும்,கலைஞர்களுக்கும் அதிதிகளினால் பாராட்டி சான்றீதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.