ஓந்தாச்சிமடத்தில் சட்ட விரோதமான முறையில் கள்ளு விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடத்தில் சட்ட விரோதமான முறையில் கள்ளு விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யபட்டதுடன் அவர்களிடமிருந்து 08 போத்தல் கள்ளும் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

அவசர தொலைபேசி அழைப்பினூடாக கிடைக்கப்பற்ற தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்கு சிறுகுற்ற பிரிவு பொறுப்பதிகாரி பீ.ஸ்.பீ.பண்டாரா தலைமையிலான குழுவினார் சென்றிருந்தனர். அவ்வேளையில் ஓந்தாச்சிமடத்தின் சனநடமாற்றம் அற்ற பிரதேசத்திலையே குறித்த சட்டவிரோத கள்ளு விற்பனை  நடைபெற்று கொண்டிருந்த போதே இவர்களை கைது செய்து செய்ததாக பொறுப்பதிகாரி தெரிவித்தார்
குறித்த நபர்கள் நிதிமன்றில் ஆஜர்படுத்துப்பட்ட வேளை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும். மீண்டும் எதிர்வரும் 10 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகும்படி நிதவான் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்…பழுகாமம் நிருபர்